Tue09012015

Last updateWed, 02 Sep 2015 12am

Back You are here: Home Using Joomla! Using Extensions Modules User Modules சினிமா சினிமா செய்திகள்

சினிமா செய்திகள்

அனிருத் இசையில் அதிர்ந்த அஜித்

தமிழ்த் திரையுலகில், அஜித்குமார் முடிசூடா மன்னனாக இருந்துவரும் நிலையில், தற்போது அவருக்கு பிடித்த பாட்டாக, அனிருத் இசையிலான பாடல் உள்ளதாக தகவல் வைரலாக பரவி வருகிறது. 

Read more...

சென்னையில் ஸ்வீடன் திரைப்பட விழா: இன்று தொடங்கி 4 நாட்கள் நடக்கிறது

சென்னையில் உள்ள இண்டோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் அமைப்பு புது டெல்லியில் உள்ள ஸ்வீடன் நாட்டு தூதரகத்துடன் இணைந்து சென்னையில் ஸ்வீடன் திரைப்பட விழாவை நடக்கிறது. இன்று (ஆகஸ்ட் 31) தொடங்கி வருகிற 4ந் தேதி வரை 4 நாட்கள்

Read more...

மூன்றாம் உலகப்போர் படத்தை வெளியிடும் தேனாண்டாள் பிலிம்ஸ்!

தற்போது பேய் படங்களை மொத்த குத்தகை எடுத்து வருகிறது தேனாண்டாள் பிலிம்ஸ். அருந்ததி, காஞ்சனா, அரண்மனை, பிசாசு, டிமான்டி காலனி என வரிசையாக பேய் படங்களாக வெளியிட்டு ஹிட் கொடுத்து வரும் தேனாண்டாள் பிலிம்ஸ், ஸ்ரீகாந்த் நடித்துள்ள

Read more...

காஜல்அகர்வாலின் துணிச்சல்!

ஜில்லாவுக்கு பிறகு சரியான படவாய்ப்புகள் இல்லாமல் ஆந்திராவில் முகாமிட்டிருந்த காஜல்அகர்வால், தனுசுடன் மாரி படவாய்ப்பு கிடைத்ததும் உற்சாகமானார். ஏற்கனவே அவருடன் ஒருமுறை நடிக்கயிருந்தது கைநழுவிப்போன நிலையில், இந்த முறை அவருடன்

Read more...

ரஜினி பாணியில் விஜய்க்கு பாட்டெழுதிய வைரமுத்து!

தனது வாரிசுகளான மதன் கார்க்கி, கபிலன் வைரமுத்து ஆகியோரை களத்தில் இறங்கி விட்டுவிட்டார் வைரமுத்து. அதில் மதன் கார்க்கி பல ஹிட் பாடல்களை கொடுத்திருப்பதோடு, பாகுபலி உள்பட சில படங்களுக்கு வசனமும் எழுதியுள்ளார். இப்படி வாரிசுகள்

Read more...

'பிளாக்'கில் விற்கப்பட்ட கல்யாண அழைப்பிதழ்

கன்னடத் திரையுலகின் முக்கிய குடும்பமான மறைந்த நடிகர் ராஜ்குமாரின் பேத்தியும், நடிகர் சிவராஜ்குமாரின் மகளான நிருபமாவின் திருமணம் நேற்று காலை பெங்களூரு பேலஸ் மைதானத்தில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அந்தத் திருமணத்திற்கான

Read more...

பாடலுடன் முடியும் அகிலின் படப்பிடிப்பு

பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மற்றும் நடிகை அமலாவின் மகன் அகில் டோலிவுட்டில் அதிரடி நாயகனாக களம் இறங்கவுள்ளார். இயக்குநர் விவி விநாயக் இயக்கும் இப்படத்தில் அகிலுக்கு ஜோடியாக நடிகை சேஷா சைகள் நடித்து

Read more...

3 வருடமாக தயாரான பேய் படம் 17ந் தேதி ரிலீஸ்

இது பேய்பட சீசன். இந்த சீசன் தொடங்குவதற்கு முன்பே சிலந்தி படத்தின் தயாரிப்பாளர் சங்கர் தன் பெயரை ஹிருஷிகேச அச்சுதன் சங்கர் என்று மாற்றி கொண்டு இயக்கிய படம் கோப்பெரும்தேவி. சக்தி டாக்கீஸ் ஏ.ராஜசேகர் ரெட்டி தயாரித்திருக்கிறார்.


எஸ்.எம்.பிரசாந்த் இசையமைத்துள்ளார் . 

இதில் கோவை சரளா, வி.டி.வி கணேஷ், சிங்கம்புலி, ஸ்ரீமன், சாமி நாதன், வெண்ணிற ஆடை மூர்த்தி, பாண்டு, சாம்ஸ், அனுமோகன், வெங்கல்ராவ், பயில்வான் ரங்கநாதன், அல்வா வாசு உள்பட 18 நகைச்சுவை நடிகர்கள் இணைந்து நடித்துள்ளார்கள் . இவர்களுடன் ஊர்வசி, தேவதர்ஷினி, டெல்லி கணேஷ், இளவரசு ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். ஆராத்யா என்ற புதுமுக நடிகை கதாநாயகியாகவும் பேயாகவும் நடித்துள்ளார். 

அடர்ந்த காட்டுக்குள் இருக்கும் புதையலை எடுக்க ஒரு நகைச்சுவைப் பட்டாளம் கிளம்புகிறது. அந்த புதையலை பேய் ஒன்று பாதுகாத்து வருகிறது எனும் விஷயம் தெரியாமல் அவர்கள் அந்த பேயிடம் மாட்டி என்னவெல்லாம் ஆகிறார்கள் என்பது படத்தின் கதை.

மீண்டும் வழக்கை சந்தித்த சிம்புவின் வாலு!

சிம்பு நடித்த வாலு படம் ஏற்கனவே பல வழக்குகளை சந்தித்த பிறகுதான் திரைக்கு வந்தது. அதையடுத்து இப்போது, அந்த படத்தை தெலுங்கில் ஷார்ப் என்ற பெயரில் வெளியிடும் டப்பிங் வேலைகள் சென்னையில் உள்ள ஃபோர் பிரேம் தியேட்டரில் நடந்து


கொண்டிருக்கிறது. இந்நிலையில் மறுபடியும் அந்த படம் சம்பந்தமாக ஒரு பிரச்சினை நீதிமன்றத்துக்கு சென்று திரும்பியிருக்கிறது. அதாவது, வாலு படத்தை மூன்று வருடங்களுக்கு முன்பு தயாரிக்க தொடங்கிய போதே, தெலுங்கு ரைட்ஸ் வியாபாரமாகி விட்டதாம். ஒன்றரை கோடி ரூபாயை அப்போதே நிக் ஆர்ட்ஸிடம் கொடுத்து விட்டார்களாம். ஆனால், இப்போது அவர்கள் தெலுங்கு ரைட்ஸ் பற்றி பேசியபோது, கூடுதல் தொகை தர வேண்டும் என்று கேட்டார்களாம். அதற்கு தெலுங்கு ரைட்ஸை வாங்கிய நிறுவனம், ஒன்றரை கோடி ரூபாய்க்கு மூன்று வருடம் வட்டி போட்டு பாருங்கள். அதுவே பெரிய தொகையாகி விடும் என்றார்களாம். இதையடுத்து பிரச்சினை பெரிதாகி விட்டதாம். நிக் ஆர்ட்ஸ் வாலு படத்தின் தெலுங்கு ரைட்ஸ்க்காக அக்ரிமென்ட் போட்டுக்கொடுத்த விவரங்கள் அனைத்தும் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டதாம். அதன்பிறகு நடந்த விசாரணைக்குப்பிறகு அதே தொகைக்கு தெலுங்கு உரிமைத்தை கொடுக்க வேண்டும் என்ற தீர்ப்பாகி விட்டதாம். இந்த பிரச்சினை தீர்த்த பிறகுதான் தெலுங்கு பதிப்புக்கான டப்பிங் வேலைகள் நடக்கிறது. ஹன்சிகாவுக்கான டப்பிங் இரண்டு நாட்களில் முடிந்து விட்ட நிலையில், தற்போது சிம்புவுக்கான தெலுங்கு டப்பிங் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது.

பிச்சைக்காரன் படத்தின் எடிட்டிங் வேலைகள் நடக்கிறது!

இந்தியா பாகிஸ்தான் படத்தை அடுத்து விஜய் ஆண்டனி நடித்து வரும் படம் பிச்சைக்காரன். சொல்லாமலே சசி இயக்கி வரும் இந்த படம் ஒரு சமூக பிரச்சினையை மையக்கருவாகக் கொண்டு உருவாகிறது. குறிப்பாக பிறக்காத பேரனுக்காக சொத்து சேர்க்கும்


நபர்களை வெளுத்து வாங்குகிறதாம் படக்கதை. அதோடு, இந்த படத்தில் விஜய் ஆண்டனி நிஜ பிச்சைக்காரனாக நடிக்கவில்லை. ஒரு பிரச்சினைக்காக அவர் பிச்சைக்காரன் போல் தலைமறைவாகி நடிக்கிறார். அதற்காக பிச்சைக்காரர்கள் அதிகமாக கூடும் கோயில் வாசல்களில் அதிகமான காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கிறது. அதோடு, பிச்சைக்காரர்கள் உருவாவது பற்றிய ஒரு தத்துவப்பாடலும் இந்த படத்தில் உள்ளது. 

மேலும், இந்தியா பாகிஸ்தான் படத்தில் விஜய் ஆண்டனி நடித்து வந்தபோது இந்த பிச்சைக்காரன் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்து விட்டார் சசி. ஆனால், சமீபத்தில்தான் வசன காட்சிகளை படமாக்கி முடித்துள்ளனர். ஆனபோதும் இன்னும் இரண்டொரு பாடல் காட்சிகள் படமாக்கப்பட வேண்டியுள்ளதாம். 

 

இதற்கிடையே, நவம்பரில் படம் ரிலீஸ் என்று செய்தி வெளியிடப்பட்டுள்ள நிலையில், தற்போது அப்படத்தின் எடிட்டிங் வேலைகளை முடுக்கி விட்டிருக்கிறார் சசி. மொத்த எடிட்டிங் பணிகளும் முடிந்தபிறகு ஏதேனும் காட்சிகளை ரீஷூட் பண்ண வேண்டுமென்றால் பேலன்ஸ் உள்ள பாடலை படமாக்கும்போது அதையும் சேர்த்து படமாக்க திட்டமிட்டுள்ளார்களாம்.

ஜாக்கிசானைத் தொடர்ந்து வதந்தியில் சிக்கிய அர்னால்டு!

சினிமா பிரபலங்களைப்பற்றிய வதந்திகள் பரவுவது சர்வசாதாரணமாகி விட்டது. சமீபகாலமாக சில நடிகைளின் ஆபாச வீடியோக்கள் வாட்ஸ் அப்புகளில் அணிவகுத்ததை அடுத்து, இப்போது ஹாலிவுட் பிரபலங்களை குறி வைத்து சில வதந்திகள் வெளியாகி


ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகின்றன. 

அந்த வகையில், சமீபத்தில் உலக அளவில் ரசிகர்களை கவர்ந்து வைத்திருக்கும் ஜாக்கிசான் மாரடைப்பால் மரணம் அடைந்து விட்டதாக ஒரு செய்தி வைரலாக பரவியது. பின்னர் அது வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு ஹாலிவுட்டின் அதிரடி நடிகரான அர்னால்டும் மாரடைப்பால் மரணமடைந்து விட்டதாகவும் வாட்ஸ்அப்பில் செய்தி பரப்பி விட்டுள்ளனர். ஆனால் அர்னால்டு எந்தவித உடல்நலக்குறைவும் இன்றி நலமாக இருக்கிறார் என்பதுதான் உண்மை. 

 

தற்போது 68 வயதாகும் அர்னால்டு, டெர்மினேட்டர், சிக்ஸ்த் டே போன்ற படங்களில் நடித்து உலக ரசிகர்களை கவர்ந்திழுத்தவர். அதோடு இன்றுவரை கட்டுமஸ்தான நடிகர் என்கிற இலக்கணத்துக்குரியவராகவும் தனது உடல்கட்டை பராமரித்து வருகிறார். இந்த நிலையில், ரஜினி நடிக்கHருக்கும் எந்திரன்- 2 படத்தில் அவரை வில்லனாக நடிக்க வைக்கும் முயற்சி நடப்பதாகவும் இன்னொரு செய்தி பல மாதங்களாக கோலிவுட்டில் உலவிக்கொண்டிருக்கிறது. இதுவும் வதந்திதானா? இல்லையா? என்பதும் விரைவில் தெரிந்து விடும்.

மிஜாக்சனை ஒட்டிக்கொண்ட இந்திய கலாச்சாரம்!

லண்டனில் பிறந்து வளர்ந்தவர் எமி ஜாக்சன். மதராசப்பட்டினம், தாண்டவம், ஐ படங்களில் நடித்த இவர், தற்போது விஐபி-2 மற்றும் விஜய் 59, கெத்து ஆகிய படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். ஆக, 2010ம் ஆண்டே சென்னைக்கு வந்த எமிஜாக்சன், கடந்த ஐந்து


வருடங்களாக தமிழ் மற்றும் இந்தி படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். 

மேலும், விண்ணைத்தாண்டி வருவாயா இந்தி பதிப்பான ஏக் திவானா தா என்ற படத்தில் நடித்தபோது, அந்த படநாயகனான பிரதீப் பாப்பரை காதலித்ததோடு, அவரது பெயரை தனது உடம்பிலும் பச்சைக்குத்திக்கொண்டார். ஆனால் அந்த படத்தில் நடித்து முடித்ததோடு அவர்களது காதலும் முறிந்து போனது. ஆனால் அப்போது பெரிதாக பீல் பண்ணவில்லை எமி. அதன்பிறகு லண்டனைச்சேர்ந்த ஜார்ஜ் பனாயிடோ என்பவரை இரண்டாவதாக காதலித்தார். லண்டனில் அவருடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் இன்ஸ்டா கிராமில் வெளியிட்டார். ஆனால் இப்போது தான் வெளியிட்ட அந்த படங்களை தானே நீக்கி விட்டார் எமிஜாக்சன். 

காரணம், எம்ஜாக்சனை ஜார்ஜ் காதலித்ததற்கு அவரது பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து விட்டார்களாம். அதனால் பெற்றோருக்காக காதலி எமியை கட் பண்ணி விட்டாராம் ஜார்ஜ். இதையடுத்து, லண்டனைப் பொறுத்தவரை காதலிப்பது, பிரிவதெல்லாம் ரொம்ப சாதாரணமான விசயமாக கருதப்பட்டு வந்தாலும், சில ஆண்டுகளாக இந்திய கல்ச்சரில் வாழ்ந்து பழகி விட்ட எமிஜாக்சன், காதலர் ஜார்ஜை தான் பிரிந்து விட்டதாக சிலரிடம் சொல்லி ரொம்பவே பீல் பண்ணினாராம். 

ப்ரூஸ் லீ தலைப்பை உறுதி செய்த ராம் சரண்

டோலிவுட்டின் மெகா ஸ்டார் நடிகர் ராம் சரண் ஸ்டன்ட் கலைஞராக நடிக்கும் படத்தை இயக்குநர் ஸ்ரீனு வைட்டாலா இயக்குகின்றார். இப்படத்தில் நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் நாயகியாக நடித்துள்ளார். இப்படத்திற்கு தலைப்பு வைக்க ப்ரூஸ் லீ, ரீசவுன்ட்,மை நேம் இஸ்

Read more...

மகனின் பிறந்தநாளை தீவில் கொண்டாடும் மகேஷ் பாபு

டோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு ஸ்ரீமந்துடு படத்தின் வெற்றிக்கு பின்னர் தனது குடும்பத்தினருடன் தாய்லாந்திற்கு ஓய்வெடுக்க சென்றுள்ளார். தனது மனைவி நர்மதா,மகன் கௌதம் கிருஷ்ணா,மகள் சித்தாராவுடன் விடுமுறையைக் கழித்து வரும்

Read more...

சாந்தனு-கீர்த்தி தம்பதிக்கு விருந்து கொடுத்த விஜய்!

எம்ஜிஆர் வாழ்ந்த காலத்தில் தன்னை யார் சந்திக்க வந்தாலும் அவர்களிடம், சாப்பிட்டீங்களா? என்றுதான் முதல் கேள்வியே

Read more...

'10 எண்றதுக்குள்ள' படப்பிடிப்பு நிறைவு

விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம், சமந்தா மற்றும் பலர் நடிக்கும் '10 எண்றதுக்குள்ள' படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்துள்ளது. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் 'கோலி சோடா' படத்திற்குப் பிறகு விஜய் மில்டன் இயக்கி வரும்

Read more...

ரஜினி முருகனை எதிர்பார்க்கும் கீர்த்தி சுரேஷ்!

கோலிவுட்டில் வளர்ந்து கொண்டிருந்த லட்சுமிமேனன், ஸ்ரீதிவ்யா, கயல் ஆனந்தி உள்ளிட்ட சில நடிகைகளுக்கு அதிர்ச்சி கொடுத்தவர் கீர்த்தி சுரேஷ். அந்த அளவுக்கு, நடித்த முதல் படம் திரைக்கு வருவதற்கு முன்பே இது என்ன மாயம், ரஜினிமுருகன், பாம்பு சட்டை

Read more...

'அமரன் 2' அடுத்த மாதம் ஆரம்பம்

கே.ராஜேஷ்வர் இயக்கத்தில் கார்த்திக், பானுப்ரியா மற்றும் பலர் நடித்த 'அமரன்' படம் 1992ம் ஆண்டு வெளிவந்தது. அந்தப் படத்தின் தொடர்ச்சியாக 23 ஆண்டுகள் கழித்து 'அமரன்' படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய அறிவிப்பை படத்தின் இயக்குனர் கே.ராஜேஷ்வர்,

Read more...

பசங்க-2 ஆனது ஹைக்கூ

சிம்பு-நயன்தாரா நடிப்பில் இது நம்ம ஆளு படத்தை இயக்கி வந்த டைரக்டர் பாண்டிராஜ், அந்த படம் பைனான்ஸ் பிரச்சினையில்

Read more...

அதர்வாவின் ஈட்டி ரிலீசுக்கு தயாராகி விட்டது!

பரதேசி படம் அதர்வாவுக்கு ஒரு அடையாளமாக அமைந்தது. என்றபோதும் ஒரு ஹீரோவாக அவருக்கு அந்த படம் நிலையான இடத்தை பிடித்துக் கொடுக்கவில்லை. அது டைரக்டர் பாலாவின் படமாகிவிட்டது. அதனால் சற்குணம் இயக்கத்தில் நடித்த சண்டிவீரன்

Read more...

பிரபல நடிகை பிரீத்தி குப்தா நிர்வாண படங்கள் லீக்

பிரபல நடிகை பிரீத்தி குப்தாவின் நிர்வாணப் படம் மற்றும் வீடியோக்கள், சமூக வலைதளங்களில் உலா வந்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்தி டிவி தொடரில் நடித்து புகழ் பெற்ற நடிகை, பிரீத்தி குப்தா. ககானி என்ற நெடுந்தொடரில் குணச்சித்திர வேடத்தில்

Read more...