யாழ் மே தினப் பேரணியில் புலிக் கொடி ஏந்திச் சென்ற சம்பவம் தொடர்பாக மூன்று நாட்களுக்குள் தகவல்களை
வழங்குவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு வாக்குறுதியளித்துள்ளார்.
கல்வி பிரதியமைச்சர் விஜிதமுனி சொய்தாவின் மகனது திருமணம் கொழும்பு கலதாரி விடுதியில் நேற்று முன்தினம் (04) நடைபெற்ற திருமண வைபவத்தில் கலந்துகொண்ட திஸ்ஸ அத்தநாயக்கவிடம், ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
திஸ்ஸ அத்தநாயக்கவை சந்தித்த ஜனாதிபதி, யாழ் மேதினக் கூட்டம் எவ்வாறு நடைபெற்றதென வினவியுள்ளார். இதன்போது அரசாங்கத்தின் தேவைக்கேற்ப புலிக்கொடி அனுப்பப்பட்டதை திஸ்ஸ அத்தநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுகுறித்து ஆராய்ந்துபார்க்க இரண்டு,மூன்று நாட்கள் அவகாசம் தேவையெனக் கூறிய ஜனாதிபதி, பேரணியில் புலிக் கொடி காண்பிக்கப்பட்ட சம்பவத்துடன், அரசாங்கத்திற்கும், எதிர்க்கட்சிகளுக்கும் தொடர்பிருக்கலாம் எனக் கூறியுள்ளார்.



