Wed06192013

Last update12:00:00 AM

Font Size

Profile

Menu Style

Cpanel

காணொளி 2

Video 1

Back சினிமா சினிமா கிசுகிசு தாய்லாந்தில் நண்பர்களுடன் த்ரிஷா பிறந்தநாள் கொண்டாட்டம்!

தாய்லாந்தில் நண்பர்களுடன் த்ரிஷா பிறந்தநாள் கொண்டாட்டம்!

பார்ட்டி, கொண்டாட்டம் என்று செம ஜாலியான பேர்வழி நடிகை த்ரிஷா. சாதாரண நாட்களிலேயே பார்ட்டிகளில் அமர்க்களப்படுத்தும் த்ரிஷாவுக்கு பிறந்தநாள் என்றால் கேட்கவா

வேண்டும் அமர்க்களப்படுத்தி இருக்கிறார். சில தினங்களுக்கு முன்னர் மே 3ம் தேதி த்ரிஷாவுக்கு பிறந்தநாள், வழக்கமாக உள்ளூரில் பிறந்தநாளை கொண்டாடும் த்ரிஷா இம்முறை ஒரு மாறுதலுக்காக தாய்லாந்து பறந்து சென்று அங்குள்ள தீவு ஒன்றில், தனது தோழிகளுடன்  கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார்.

இதுகுறித்து த்ரிஷா கூறியுள்ளதாவது, சினிமா துறையில் இது எனக்கு 10வது ஆண்டு. சினிமாவில் கவர்ச்சி வேடங்களில் நடிப்பது ஒரு கவுரவம்தான். இவ்வளவு காலத்துக்கு பிறகும் என்னுடைய நடிப்பு பேசப்படுகிறது. தொடர்ந்து எனக்கு ரசிகர்கள் அதரவு தெரிவித்து வருகின்றனர். சந்தோஷமாக இந்த துறையில் இருந்து வருகிறேன். சினிமா என் வாழ்வில் ஒரு அங்கம். இதை விட்டு எங்கும் போக மாட்டேன். என்னைப்பற்றி நிறைய வதந்திகள் வருகிறது. ஆனால் அதை சொந்த வாழ்க்கையில் போட்டு ‌குழப்பிக்கொள்ள மாட்டேன். எனது தோழிகள் சினிமாவை தவிர்த்து என்னை த்ரிஷாவாகத்தான் பார்க்கிறார்கள். அதுவே எனக்கு சந்தோஷம் என்று கூறியுள்ளார். மேலும் இந்த பிறந்தநாளுக்கு புதிதாக கார் ஒன்றை வாங்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.