ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடரின், ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவு பைனலுக்கு இந்திய அணி முன்னேறி அசத்தியது.
இந்தியா, சீனா, பாகிஸ்தான் உட்பட 15 நாடுகள் பங்கேற்கும் 16வது ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடர் குவைத்தில் நடக்கிறது.
பெண்கள் பிரிவு அரையிறுதியில் இந்தியா, கொரியா அணிகள் மோதின. இந்தியாவின் தீபிகா பல்லீகல், அனகா அலங்காமனி ஆகியோர் போட்டிகளில் அசத்தல் வெற்றி பெற, 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறியது.
ஆண்கள் அசத்தல்:
ஆண்களுக்கான அரையிறுதியில் இந்திய அணி, குவைத்தை எதிர்கொண்டது. இதில் இந்திய வீரர்கள் ஹரிந்தர் பால் சிங் சாந்து, சவுரவ் கோசால் ஆகியோர் வெற்றி பெற, இந்திய அணி பைனலுக்கு தகுதி பெற்றது. 1981ல் கராச்சியில் நடந்த முதல் தொடரின் போது, இந்திய அணி வெள்ளி வென்றிருந்தது. இதன் பின் தற்போது தான் பைனலுக்கு முன்னேறியுள்ளது.
பைனலில் இந்திய ஆண்கள் அணி, பாகிஸ்தானை சந்திக்கிறது. இந்திய பெண்கள் அணி, ஹாங்காங்கை எதிர்கொள்கிறது.



