மலேசிய ஓபன் பாட்மின்டன் தொடரின் அரையிறுதிக்கு இந்தியாவின் சிந்து முன்னேறினார்.
மலேசியாவில் நடந்து வரும் இத்தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதியில்
இந்தியாவின் சிந்து, ஜப்பானின் கனாவை சந்தித்தார். முதல் செட்டை 21-19 என சிந்து கைப்பற்றினார். இரண்டாவது செட்டிலும் தனது ஆதிக்கத்தை தொடர்ந்த சிந்து, 21-15 என கைப்பற்றினார். முடிவில் சிந்து 21-19, 21-15 என்ற நேர் செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதியில் இந்தியாவின் சவுரப் வர்மா, இந்தோனேசியாவின் டாமியிடம் 17-21, 14-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்தார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதியில் இந்தியாவின் பிரனாய், மலேசியாவின் முகமதுவிடம் 14-21, 20-22 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்தார்.



