Sat05252013

Last update01:21:52 PM

Font Size

Profile

Menu Style

Cpanel

காணொளி 2

Video 1

Back செய்திகள் செய்திகள் இலங்கை கோத்தபாய மீது ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் எதிர்ப்பு!

கோத்தபாய மீது ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் எதிர்ப்பு!

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் மத்தியில் கோத்தபாய ராஜபக் மீதான எதிர்ப்பு மேலெழுந்துள்ளது.

இதனால் பாதுகாப்புச் செயலாளரை ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சிரேஷ்ட உறுப்பினர்கள் பகிரங்கமாக விமர்சிக்கவும் ஆரம்பித்துள்ளனர்.

அந்தக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களும், சிரேஷ்ட அமைச்சர்கள் என பல்பிடுங்கப்பட்டுள்ளவர்களுமான முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க, அமைச்சர் ஜோன் செனவிரட்ன ஆகியோரே கோத்தபாய ராஜபக் மீது பகிரங்க விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

நகர அபிவிருத்தி அதிகார சபைத் தலைவரும், பாதுகாப்புச் செயலாளருமான கோத்தபாய ராஜபக், இராணுவ அதிகாரிகளை, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களாக நியமித்து கட்சியை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளதாக அவர்கள் குற்றஞ்சுமத்துகின்றனர்.

கோத்தபாய ராஜபக்சவின் இந்த செயற்பாடு கட்சியின் யாப்பிற்கு முற்றிலும் முரணானது எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன், கோத்தபாய ராஜபக், எந்தவொரு சிரேஷ்ட உறுப்பினர்களின் கருத்துக்களையும் கவனத்தில் கொள்வதில்லை எனவும், அனைத்து மாவட்டங்களிலும் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு, இராணுவத்தினரின் உதவியைப் பெற்றுவருவதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதனால், அந்தந்த தொகுதி அமைப்பாளர்களும் செல்லாக்காசாகவே பார்க்கப்படுவதாகவும் இந்த சிரேஷ்ட உறுப்பினர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிர்வாகத்தையோ, அதிகாரங்களையோ கோத்தபாய தன் கையில் எடுக்க முடியாது எனவும் இந்த சிரேஷ்ட உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.

 

Entertainment