Thu06202013

Last update12:00:00 AM

Font Size

Profile

Menu Style

Cpanel

காணொளி 2

Video 1

Back விளையாட்டு விளையாட்டு மற்றயவை சர்வதேச டென்னிஸ் ஆறு இந்திய வீரர்கள் தகுதி

சர்வதேச டென்னிஸ் ஆறு இந்திய வீரர்கள் தகுதி

மதுரை: "டி.வி.எஸ்., ஐ.டி.எப்., பியூச்சர்' சர்வதேச டென்னிஸ் தகுதிச் சுற்றில், விவேக் ÷ஷாகன், நீரஜ் இளங்கோவன் உள்ளிட்ட ஆறு இந்திய வீரர்கள் வெற்றி பெற்று, ஒற்றையர் பிரிவில்

விளையாடும் வாய்ப்பை பெற்றனர்.

மதுரை யூனியன் கிளப் சார்பில், "டி.வி.எஸ்., ஐ.டி.எப்., பியூச்சர்' சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் மதுரையில் நடக்கிறது. இதன் தகுதிச் சுற்றில் இந்தியா, ஆஸ்திரியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர்.

நேற்று நடந்த ஒற்றையர் பிரிவு தகுதி, இரண்டாவது சுற்றில், இந்தியாவின் விவேக் ÷ஷாகன், சக நாட்டைச் சேர்ந்த ஷாபாஸ் கானை 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தினார்.

இதே போல, இந்தியாவின் நீரஜ் இளங்கோவன் 6-4, 7-6 என்ற நேர் செட்டில் சகவீரரான தேஜாஸ் சாயுகுல்கரை வீழ்த்தினார். இந்தியாவின் குணால் ஆனந்த் 6-4, 6-1 என்ற நேர் செட் கணக்கில், போர்ச்சுகலின் புரூனோ பெட்ரோசாவை தோற்கடித்தார். இந்தியாவின் விக்னேஷ் வீரபத்திரன் 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் சகநாட்டைச் சேர்ந்த சவுரப் படேலை வீழ்த்தினார். இந்தியாவின் பரீஸ் முகமது 7-6, 7-6 என சகநாட்டைச் சேர்ந்த ரோனக் மனுஜாவை வீழ்த்தினார். இந்தியாவின் ரக்ஷய் தக்கர் 7-6, 6-4 என்ற நேர் செட் கணக்கில் சகவீரரான அஜய் செல்வராஜை தோற்கடித்தார்.

மற்ற போட்டிகளில் ஆஸ்திரியாவின் பீட்டர் கோல்டுஸ்டைனர், அமெரிக்காவின் ஆஸ்டின் கரோசி வென்றனர். தகுதிச் சுற்றில் வெற்றி பெற்ற 6 இந்தியர்கள் சேர்த்து மொத்தம் 8 பேர் முக்கிய பிரிவில் விளையாடும் வாய்ப்பை பெற்றனர்.