Wed06192013

Last update12:00:00 AM

Font Size

Profile

Menu Style

Cpanel

காணொளி 2

Video 1

Back விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட் கட்டாக்கில் அசத்திய கோல்கட்டா! * டெக்கான் 5வது தோல்வி

கட்டாக்கில் அசத்திய கோல்கட்டா! * டெக்கான் 5வது தோல்வி

கட்டாக்: கட்டாக்கில் நேற்று நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் அசத்திய கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் சுலபமாக வென்றது. மீண்டும் சொதப்பிய

டெக்கான் அணி தொடர்ந்து 5வது தோல்வியை பெற்றது.

ஒரிசாவில் உள்ள கட்டாக்கில் நேற்று நடந்த ஐந்தாவது ஐ.பி.எல்., தொடரின் 29வது லீக் போட்டியில் கோல்கட்டா நைட் ரைடர்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ் அணிகள் மோதின.

மழையால் தாமதம்:

"டாஸ் வென்ற கோல்கட்டா அணி கேப்டன் காம்பிர், "பீல்டிங் தேர்வு செய்தார். மழை காரணமாக போட்டி துவங்குவதில் சுமார் ஒரு மணி நேரம் தாமதம் ஏற்பட்டது.

தவான் அரைசதம்:

டெக்கான் அணிக்கு கேப்டன் சங்ககரா, ஷிகார் தவான் இணைந்து நல்ல துவக்கம் தந்தனர். யூசுப் பதான் "சுழலில் ஒரு சிக்சர் அடித்தார் தவான். பின் பிரட் லீ ஓவரில் இரண்டு பவுண்டரி விளாசினார். பாலாஜி பந்தில் சங்ககரா(12) போல்டானார். தொடர்ந்து கோல்கட்டா பவுலர்கள் மிரட்ட, விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் சரிந்தன. பார்த்திவ் படேல்(23) ரன் அவுட்டானார். பிரட் லீ "வேகத்தில் கேமரான் ஒயிட்(10) காலியானார். அரைசதம் எட்டிய தவான்(50), ரஜத் பாட்யா பந்தில் வெளியேற, ஸ்கோர் உயர வாய்ப்பு இல்லாமல் போனது. அங்கித் சர்மா(1) தாக்குப்பிடிக்கவில்லை. நரைன் "சுழலில் ஜாகி(3), ஸ்டைன்(7) நடையை கட்டினர். டெக்கான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 126 ரன்கள் மட்டும் எடுத்தது.

திணறல் துவக்கம்:

சுலப இலக்கை விரட்டிய கோல்கட்டா அணிக்கு துவக்கத்திலேயே "ஷாக் கொடுத்தார் ஸ்டைன். இவரது "வேகத்தில் பிரண்டன் மெக்கலம்(10) வெளியேறினார். அமித் மிஸ்ரா "சுழலில் பிஸ்லா(10) போல்டானார். பிரதாப் சிங் ஓவர்களில் பவுண்டரிகளாக விளாசிய கேப்டன் காம்பிர்(30) அதிக நேரம் நீடிக்கவில்லை. அடுத்து வந்த யூசுப் பதான்(6), அங்கித் சர்மா பந்தில் ஒரு இமாலய சிக்சர் அடித்த கையோடு, "போல்டாகி ஏமாற்றினார். அப்போது கோல்கட்டா அணி 10.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 72 ரன்கள் எடுத்து திணறியது.

திவாரி அபாரம்:

பின் மனோஜ் திவாரி, காலிஸ் சேர்ந்து அசத்தினர். காலிஸ் 23 ரன்களுக்கு ஸ்டைன் பந்தில் அவுட்டாக, லேசான பதட்டம் ஏற்பட்டது. ஆனாலும், உறுதியாக போராடிய திவாரி(30*), தேபபிரதா தாஸ்(9*) இணைந்து வெற்றியை உறுதி செய்தனர். கோல்கட்டா அணி 19 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 127 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

ஆட்ட நாயகன் விருதை பிரட் லீ வென்றார்.