Fri05242013

Last update06:25:13 PM

Font Size

Profile

Menu Style

Cpanel

காணொளி 2

Video 1

Back விளையாட்டு விளையாட்டு மற்றயவை மதுரையில் டென்னிஸ் திருவிழா!

மதுரையில் டென்னிஸ் திருவிழா!

மதுரை:சர்வதேச வீரர்கள் பங்கேற்கும் ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் மதுரையில் நடக்க உள்ளது.

மதுரை தல்லாகுளத்தில் உள்ள யூனியன் கிளப்(காந்தி மியூசியம் அருகில்) மைதானத்தில் வரும் 21 முதல் 28ம் தேதி வரை டி.வி.எஸ்.,-ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்க உள்ளது. போட்டிகள் காலை, மாலை என இரண்டு நேரங்களிலும் நடைபெறும். இதில், இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, குரோஷியா, சீனா, ஆஸ்திரேலிய நாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர்.

ரூ.5 லட்சம் பரிசு:

இப்போட்டிக்காக தேர்ந்தெடுப்படும் மொத்த வீரர்களின் எண்ணிக்கை 32. உலக தரவரசைப்படி 24 வீரர்கள் பங்கேற்பர். மீதமுள்ள 8 பேர், 21 மற்றும் 22ம் தேதி நடைபெறும் தகுதிச் சுற்று போட்டிகளின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். தகுதிச் சுற்றில் முன்னணி இந்திய வீரர்களும் பங்கேற்கின்றனர். தொடரில் வெல்பவர் ரூ. 5 லட்சம் பரிசுத் தொகையை தட்டிச் செல்வார்.

நேரடி ஒளிபரப்பு:

ஐ.டி.எப்., அந்தஸ்து பெற்ற தொடர், மதுரையில் முதல் முறையாக நடத்தப்படுகிறது. போட்டிகளை தூர்தர்ஷனில் 27, 28ம் தேதி நேரடி ஒளிபரப்பாக காணலாம். அனுமதி சீட்டுக்களை மதுரை யூனியன் கிளப்பில் பெற்றுக் கொள்ளலாம்.

 

Entertainment