Thu05232013

Last update12:00:00 AM

Font Size

Profile

Menu Style

Cpanel

காணொளி 2

Video 1

Back சினிமா சினிமா கிசுகிசு ஒரு கல் ஒரு கண்ணாடிக்கு வரிவிலக்கு மறுப்பு! உதயநிதி அறிக்கை!

ஒரு கல் ஒரு கண்ணாடிக்கு வரிவிலக்கு மறுப்பு! உதயநிதி அறிக்கை!

ஓகே ஓகே படத்திற்கு கேளிக்கை வரி மறுக்கப்பட்டிருப்பது எந்த வகையில் நியாயம்? என்று பிரபல தயாரிப்பாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:

நான் தயாரித்து நடித்து திரைக்கு வந்துள்ள ஒரு கல் ஒரு கண்ணாடி படத்துக்கு கேளிக்கை வரிவிலக்கு மறுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் கேளிக்கை வரிவிலக்கு கொடுக்கப்பட்ட ஒரு திரைப்படத்தில் ஆங்கிலம் கலந்த தமிழ் பாடல் உள்ளது. கேளிக்கை விடுதியில் வைத்து திருமணம் நடப்பது போல் காட்சி வருகிறது. இதுபோன்ற திரைப்படத்துக்கு வரிவிலக்கு அளித்துவிட்டு, எங்கள் படத்துக்கு வரிவிலக்கு அளிக்க மறுப்பது எந்த வகையில் நியாயம்?

வன்முறை அதிகமாக உள்ள மற்றும் ஆங்கில கலப்பு அதிகமாக உள்ள படத்துக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து மக்களையும் கவர்ந்த ஒரு கல் ஒரு கண்ணாடி படத்துக்கு வரிவிலக்கு அளிக்க மறுப்பது என்ன நியாயம்? அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எங்கள் நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு வரிவிலக்கு மறுக்கப்படுகிறது. இதனால் எனக்கு மட்டும் பாதிப்பு இல்லை. என்னை நம்பி படத்தை வாங்கிய வினியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அந்த அறிக்கையில் உதயநிதி கூறியுள்ளார்.