தமிழ் சினிமாவில் இளம் புயல் என்ற பட்டத்துடன் வலம் வந்து கொண்டு இருக்கும் ஜெயம் ரவி, தனது திரையுலக நண்பர்களான ஜீவா, ஆர்யா, சிபிராஜ், டைரக்டர் வெங்கட் பிரபு
போன்றவர்களை தனது வீட்டிற்கு வரவழைத்து ஒரு பெரிய விருந்து கொடுத்திருக்கிறார். விருந்தில் விதவிதமாக உணவு வகைகளை சமைத்து தனது நண்பர்களுக்கு ரவியும் அவரது மனைவியும் பரிமாறியிருக்கின்றனர்.
இந்த விருந்தில் பங்கேற்றது குறித்து சிபிராஜ் கூறுகையில், ஜெயம் ரவி அளித்த விருந்தில் எனது மனைவியுடன் பங்கேற்றேன். எங்களது வேலைகள், டென்ஷன் போன்றவைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, நண்பர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து இந்த விருந்தில் பங்கேற்றது ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. இப்படி ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்த ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவிக்கு எனது நன்றிகள் என்று கூறியுள்ளார்.


