1.மேசம்:-மேசராசி அன்பர்களே சனி நன்மை தரும் கிரகமாகும்.ஏப்ரல்16,17,18வெளி நாடு சென்ற வருவதற்கான முயற்சிகளில் வேற்று மதத்தவர்களால்
எதிர் பார்த்த ஆதாயங்கள் கிடைக்கும்.திடீர் அதிர்~;டமாகிய ரேஸ் லாட்டரி போன்றவற்றால் தன வரவுகள் உண்டு. வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளைத் திருத்திக் கட்டவும்,வீடு மாற்றம் செய்யவும் எண்ணுவீர்கள்.பழைய வாகனங்களை விற்றுப் புதிய வாகனங்களை வாங்குவீர்கள். ஏப்ரல்19,20கணவன் மனைவி உறவுகளில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். சூதாட்டத்தால் வீண் பொருள் வரையம் ஏற்படக் கூடும்.காதல் விசயங்களில் வெற்றி கிடைக்கும்.அரசு வழக்குகளில் சாதகமான சூழ்நிலை உருவாகும்.சுப காரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்ச்சி அடைவீர்கள்.ஏப்ரல்21,22இரும்பு இயந்திரம் இரசாயனம் சம்பந்தமாகிய தொழில்களைச் செய்வோர்கள்,பலசரக்கு, எண்ணை சம்பந்தமான வியாபாரிகள்,பழைய பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்வோர்கள்,மாமிச உணவுகளின் வியாபாரிகள் ஆகியோர்கள் நற் பலன்களை அடைவார்கள். தாய்க்கு இருந்து வந்த நோய்கள் குறைந்து காணப்படும்.உறவினர்கள் மற்றும் நண்பர்களால் எதிர் பாராத ஆதாயங்களும் மன மகிழ்ச்சியும் உண்டாகும். பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.
இராசியான எண்:-8
இராசியான நிறம்:-நீலம்
இராசியான திசை:-தென்மேற்கு
பரிகாரம்:-சனிக் கிழமையில் சனீஸ்வர வழிபாடு செய்து எள் சாதம் தானம் செய்யவும்.
2.ரிசபம்:-ரிசபராசி அன்பர்களே செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும்.ஏப்ரல்16,17நீண்ட தூரப் பயணங்களைத் தவிர்க்கவும்.உடம்பில் வாதம் வாயு மற்றும் எலும்பு சம்பந்தமான உபாதைகள் வந்து போகும்.சொத்துக்கள் சம்பந்தமான விசயங்களில் எதிர் பார்த்த நல்ல முடிவுகள் கிடைக்கச் இன்னும் சற்று காலதாமதம் ஆகலாம்.சகோதர சகோதரிகளுடன் காரணமில்லாத சச்சரவுகள் வந்து போகும்.ஏப்ரல்18,19,20 நெருப்பு கேஸ் வெல்டிங் சம்பந்தமான தொழில்களைச் செய்வோர்கள்,காவல் துறையினர்கள்,இராணவம் சார்ந்தவர்கள்,ஹோட்டல் தொழிற் செய்வோர்கள்,விளையாட்டுத் துறையைச் சார்ந்தவர்கள்,ஆசன யோகப் பயிற்சி கூடங்களை நடத்துபவர்கள்,விளையாட்டுத் துறை சார்ந்த வீரர்கள்,ஹோட்டலில் பணி செய்பவர்கள்,தங்க நகை வியாபாரிகள் ஆகியோர்களுக்கு நல்ல பலன்கள் வந்து சேரும்.நீண்ட காலமாகப் பிரச்சனைகளில் இருந்து வந்த குடும்பச் சொத்துக்கள் கிடைக்கும். ரேஸ்ääலாட்டரி போன்ற திடீர் அதிர~;டம் மூலம் பணம் வந்து சேரும்..ஏப்ரல்21,22 யாத்தரையின் போது புதிய பெரிய மனிதர்களைச் சந்திப்பதன் மூலம் சில காரியங்களை நிறை வேற்றுவீர்கள். கணவன் மனைவி உறவுகளில் இருந்து வந்த மனக் கசப்புகள் நீங்கி உறவுகள் பலப்படும்.புதிய நண்பர்கள் சேர்க்கையால் விபரீதங்களைச் சந்திக்க வாய்ப்பு உள்ளதால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவும்.விசா சம்பந்தமான பிரச்சனைகள் தீருவதற்கான தகவல்கள் வந்து சேரும் காலமாகும்.பொதுவாக இது ஒரு நற் பலன் தரும் வாரமாகும்.
இராசியான எண்:-9
இராசியான நிறம்:-சிகப்பு
இராசியான திசை:-தெற்கு
பரிகாரம்:-செவ்வாய் கிழமையில் துர்க்கை வழிபாடு செய்து துவரை தானம் செய்து வரவும்.
3.மிதுனம்:-மிதுனராசி அன்பர்களே சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். ஏப்ரல்16 வேண்டாத மற்றவர்களின் விசயங்களில் தலையிட்டு பிரச்சனைகளை விலைக்கு வாங்கி மன நிம்மதியை இழக்க வேண்டாம்.திடீர் அதிர்~;டங்கள் மூலமாக பொருள் வந்து சேரலாம்.காதல் விசயங்களில் எதிர் பார்த்திருந்த நல்ல செய்திகள் கிடைக்க கூடிய காலமாகும்.ஏப்ரல்17,18,19தண்ணீர் கூல்டிரிங்ஸ், திரவ சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள்,உப்பு உர வியாபாரிகள்,தாய் சேய் நல விடுதிகளை நடத்துவோர்கள்,பொதுப் பணித் துறையினைச் சார்ந்தவர்கள்,நர்வளத்துறை சாரந்த பணி புரிவோர்களும் மற்றும் மருத்துவத் துறைகளைச் சார்ந்த மருத்துவர்கள்,மூலிகை சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள் ஆகியோர்கள் நல்ல இலாபம் அடைவார்கள்.தீர்த்த யாத்திரை சென்றுவர வாய்ப்பு உள்ளது.ஒரு சிலருக்கு வீடு மாற்றம் ஏற்படலாம்.பிறருக்காக உழைப்பதில் மன மகிழ்ச்சி அடைவீர்கள்.ஏப்ரல்20,21,22தென் திசையில் இருந்து பெண்களால் எதிர் பாராத நல்ல செய்திகள் வந்து சேரும்.மாமன் வழி மூலம் சில நன்மைகளைஅடைவார்கள்.குல தெய்வ வழிபாடு செய்து வருவது நல்லது.புதிய ஆடை அணிகலன்கள்,ஆடம்பர அலங்
காரப் பொருட்களை வாங்குவீர்கள்.தந்தையின் உடல் நிலையில் பாதிப்புகள் ஏற்பட்டு அவர்களால் மருத்துவச் செலவுகள் உண்டாகும்.பொதுநலத் தொண்டுகளில் பிரியமுடன் ஈடுபடுவீர்கள்.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.
இராசியான எண்:-2
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை:-மேற்கு
பரிகாரம்:-திங்கள் கிழமையில் அம்மன் வழிபாடு செய்து பச்சரிசி தானம் செய்து வரவும்.
4.கடகம்:-கடகராசி அன்பர்களே ராகு நன்மை தரும் கிரகமாகும்.ஏப்ரல்
16,17யாத்திரையின் போது சம்பந்தம் இல்லாத பிரச்சனைகள் வர ஈருப்பதால் முன் கோபத்தை தவிர்ப்பது நல்லதாகும். பழைய இரும்பு,பழைய பேப்பர் மற்றும் பிளா~;டிக் சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள்,அநாதை விடுதிகளில் இருப்பவர்கள்,விஞ்ஞானத் துறையை சார்ந்தவர்கள்,மத போதகர்கள்,மீன் முட்டை மாமிசம் போன்ற உணவுப் பொருட்களின் வியாபாரிகள் ஆகியோர்கள் நல்ல லாபம் பெறுவார்கள்.ஏப்ரல்18,19,20விவசாயம் செய்வோர்கள் கவனமுடன் செயல் படவும்.புதிய வீடு நிலம் வாங்குவது சம்பந்தமான முயற்சிகளைச் சற்று கால தாமதமாகச் செய்வது நல்லது.சூதாட்ட சம்பந்தமான ரேஸ் லாட்டரி போன்ற விசயங்களில் பணம் மற்றும் பொருட்களை ஏமாற்றம் அடையாமல் இருக்கவும்.சகோதர சகோதரிகளின் திருமணம் போன்ற சுப காரிய நிகழ்ச்சிகளில் இருந்து வந்த தடைகள் நீங்கித் திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளது.ஏப்ரல்21,22பொருளாதாரம் நெருக்கடி ஏற்படுத்தினாலும் சமாளித்து கொள்வீர்கள்.உறவினர்களின் வரவால் பொருட் செலவுகள் உண்டாகும்.தீர்த்த யாத்திரை சென்றுவர முயற்சிப்ப்Pர்கள்.காதல் விசயங்களில் நல்ல தகவல்கள் வந்து சேருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.அரசு வேலை மற்றும் உத்தியோக முயற்சிகள் வெற்றி தேடித் தரும்.பழைய வழக்குகள் மீண்டும் தொடரலாம்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.
இராசியான எண்:-4
இராசியான நிறம்:-கருப்பு
இராசியான திசை:-வடமேற்கு
பரிகாரம்:-ஞாயிற்றுக் கிழமையில் பிதுர் மற்றும் அம்மன் வழிபாடு செய்து கோதுமை தானம் செய்து வரவும்.
5.சிம்மம்:-சிம்மராசி அன்பர்களே கேது நன்மை தரும் கிரகமாகும்..
ஏப்ரல்16,17,18பழைய கடன்கள மீண்டும் தொல்லை கொடுக்கும்.அடுத்தவர் வீட்டுச் சுப காரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மன மகிழ்ச்சி அடைவீர்கள்.வீடுகளில் பணம் பொருட்கள் திருட்டுப் போக இருப்பதால் எச்சரிக்கை தேவை.புதிய வீடு மற்றும் நிலங்கள் வாங்குவீர்கள். அரசியல் வாதிகளால் ஆதாயம் உண்டு.மூத்த சகோதரரால் பொருட் செலவுகள் ஏற்படும்.ஏப்ரல்19,20,21கணவன் மனைவி உறவுகள் சுமாராகக் காணப்படும். பழைய இரும்பு,பழைய இயந்திரம் இரசாயன சம்பந்தமான தொழிற் செய்வோர்கள், விஞ்ஞானத் துறையினைச் சார்ந்தவர்கள்,மத போதகர்கள்,மடாதிபதிகள்,கழிவுப் பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்வோர்கள்,மின்னணு ஆராய்ச்சி துறையை சார்ந்தவர்கள்,மீன் முட்டை மாமிசம் போனற உணவுப் பொருட்களின் வியாபாரிகள் ஆகியோர்களுக்கு நல்ல லாபம் அடைவார்கள்.நீண்ட தூரப் பயணங்களால் மன நிம்மதி ஏற்படாது.ரேஸ் லாட்டரி போன்றவற்றின் மூலம் எதிர் பாராத தனவரவு உண்டாகும்.ஏப்ரல்22வாகனங்கள் மற்றும் வீடுகளைப் பழுது பார்ப்பதன் மூலமாகப் பொருட ;செலவுகள் ஏற்படலாம்.வேற்று மதத்தவ
ரால் ஆதாயம் உண்டு.உடம்பில் மூலம் மற்றும் உ~;ண சம்பந்தமான பீடைகள் வந்து தீரும்.விருந்தினர்களின் எதிர்பாராத வரவால் பொருள் விரையமாகும்..பொதுவாக இது ஒரு நற்பலன் தராத வாரமாகும்.
இராசியான எண்:-7
இராசியான நிறம்:-கருஞ்சிகப்பு
இராசியான திசை:-வடமேற்கு
பரிகாரம்:-திங்கள் கிழமையில் கணபதி வழிபாடு செய்து செவ்வாடை தானம் செய்யவும்.
6.கன்னி:-கன்னிராசி அன்பர்களே செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும்.ஏப்ரல்16,17,18,19 வெளி நாட்டில் வசிபவர்கள் தனது தாய் நாட்டிற்குச் சென்று வர வாய்ப்புகள் உள்ளன.துலை தூரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லதாகும்.நெருப்ப கேஸ் வெல்டிங் சம்பந்தமான தொழில்களை செய்வோர்கள்,விளையாட்டுத் துறையை சார்ந்தவர்கள், ஆசன யோகப் பயிற்சி கூடங்களை நடத்துபவர்கள்,தங்க நகைகள் வியாபாரிகள்,அசியல் வாதிகள்,காவல் துறையினர்கள்,இராணவம் சார்ந்தவர்கள்,ஹோட்டல் தொழிற் செய்வோர்கள் ஆகியோர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.ஏப்ரல்20சேர் மார்க்கெட் தொழிற் செய்வோர்கள் இலாபம் அடைவார்கள்.வங்கிகள் மூலம் எதிர் பார்த்த கடன் உதவிகள் கிடைக்கச் சற்று கால தாமதம் ஆகலாம்.கண்களில் கவனமுடன் இருத்தல் நல்லதாகும்.விவசாயம் செய்வோர்கள் மிகுந்த கவனமுடன் இருக்கவும். புதிய வீடு நிலம் வாகனம் போன்றவற்றை மற்றவர்களின் உதவிகளோடு வாங்குவீர்கள்.ஏப்ரல்21,22மனைவியின் உடல் நிலையில் பாதிப்புகள் ஏற்பட்டு அவர்களால் மருத்துவச் செலவுகள் உண்டாகும். பூர்வீகச் சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனைகள் சற்று குறையும்.திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண காரியம் கைகூடும்.பிள்ளைகளால் பொருட் செலவுகள் ஏற்பட்டாலும் அவர்களால் பண வரவு உண்டு.தீர்த்த யாத்திரை சென்று வருவதற்கான ஏற்பாடுகளில் சற்று கால தாமதம் ஏற்படும்.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.
இராசியான எண்:-9
இராசியான நிறம்:-சிகப்பு
இராசியான திசை:-தென்மேற்கு
பரிகாரம்:-செவ்வாய் கிழமையில் முருகன் வழிபாடு செய்து துவரை தானம் செய்து வரவும்.
7.துலாம்:-துலாம்ராசி அன்பர்களே சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும்.ஏப்ரல்16,17 வட திசையில் இருந்து எதிர் பாராத தன வரத்து உண்டு.மனைவியின் உடல் நிலையில் பாதிப்புகள் ஏற்பட்டு: அவர்களால் மருத்துவசெலவுகள் வந்து சேரும்.விருந்தினர் வரவால் மனமகிழ்ச்சி அடைவீர்கள்.தேவயற்ற மன சஞ்சலமும் குழப்பங்களும் குடும்பத்தில் வரக்கூடும்.புதிய நண்பர்களைச் சேர்ப்பதைத் தவிர்க்கவும். வேற்று மதத்தவர்களால் எதிர் பாரத ஆதாயங்கள் கிடைக்கும்.ஏப்ரல்18,19,20
உடம்பில் வாயு மற்றும் வயிறு சம்பந்தமாகிய தொல்லைகள் வந்து போகும்.காதல் விசயங்களில் மிகுந்த கவனமுடன் இருக்கவும். பங்காளிகளாலும்ääநண்பர்களாலும் சிற் சில தொல்லைகள் ஏற்படலாம்.ஆலயங்களைத் திருத்தி அமைப்பதற்கான பணிகளில் ஈடு பட்டு நற்பெயர் எடுப்பீர்கள்.அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் மிகவும் கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லதாகும்.ஏப்ரல்21,22கட்டிட சம்பந்தமான தரகு ஏஜணட் தொழில்களைச் செய்வோர்கள்,இனிப்புத் தின்பண்ட வியாபாரிகள்,அழகு சாதனப் பொருள் வியாபாரிகள்,கட்டிட சம்பந்தமான பொருட்களாகிய செங்கல்,மண் மணல் சிமிண்ட்போன்ற பொருட்கள் விற்பனை செய்வோர்கள்,உணவு தானியங்கள் மற்றும் பயிறு பருப்பு போன்ற பொருட்களின் வியாபாரிகள்,வீடு நிலங்களை வாங்குவோர் விற்போர்கள்,சினிமா நாடகம் போன்ற துறையினைச் சார்ந்தவர்கள் ஆதாயம் பெறுவார்கள்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.
இராசியான எண்:-6
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை:-தென்கிழக்கு.
பரிகாரம்:-வெள்ளிக் கிழமையில் மஹாலட்சுமி வழிபாடு செய்து மொச்சைப் பயறு தானம் செய்யவும்.
8.விருச்சிகம்:-விருச்சிகராசி அன்பர்களே புதன் நன்மை தரும் கிரகமாகும்.ஏப்ரல்16,17,18 புதிய தொழில்களை ஆரம்பம் செய்வதில் கால தாமதம் ஏற்படலாம். இலை கீரை வகைகள்,மருந்துப் பொருட்கள்,தபால் தந்தித் துறையை சார்ந்தவர்கள்,அச்சு இயந்திர சாலைகளை நடத்துபவர்கள்,பேனா பென்சில் நோட்புக் சம்பந்தமான ஸ்டேசனரி வியாபாரிகள், எழுத்தாளர்கள்,கவிஞர்கள்,
பாடலாசிரியர்கள்,நாடகக் கவைஞர்கள் ஆகியோர்கள் நல்ல பலன்களை அடைவார்கள்.அரசியல் வாதிகளால் ஆதாயம் இருக்காது.ஏப்ரல்19,20 பிறரிடம் பணம் கொடுத்து ஏமாற்றம் அடையாமல் இருக்கவும்.சகோதர சகோதரிகளின் தடை பட்ட சுபகாரியங்கள் நடை பெறும்.விருந்தினர் வரவால் மன மகிழ்ச்சி உண்டாகும்.அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் மிகவும் கவனமாக பேசிப் பழகுதல் நல்லதாகும்.மஹான்களின் எதிர்பாராத தரிசனங்களால் குடும்பத்தில் மன மகிழ்ச்சி உண்டாகும்.ஏப்ரல்21,22துலை தூரப் பயணங்களில் எதிர் பார்த்த வெற்றிகள் கிடைக்கும்.பிள்ளைகளின் மருத்துவச் செலவுகளுக்காகப் பொருட் செலவுகள் உண்டாகும்.பூர்வீக இடத்தை விட்டுப் பெயர்ந்து செல்ல வாய்ப்பு உள்ளது.பொருளாதாரம் சுமாராக காணப்படும். கூட்டுத் தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும்.குடும்பத்தில திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும்.புதிய நண்பர்கள் சேர்க்கையால் மன நிம்மதி அடைவீர்கள்..பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.
இராசியான எண்:-5
இராசியான நிறம:-பச்சை
இராசியான திசை:-வடக்கு
பரிகாரம்:-புதன் கிழமையில் மஹா வி~;ணு வழிபாடு செய்து பாசிப்பயிறு தானம் செய்து வரவும்.
9.தநுசு:-தநுசுராசி அன்பர்களே வியாழன் நன்மை தரும் கிரகமாகும்.ஏப்ரல்16,17,18பூ பழம் நறுமணப் பொருட்களின் வியாபாரிகள்,ஆலயபணிகளைச் செய்பவர்கள்,அற நிலையத் துறையை சார்ந்தவர்கள்,கம்யுட்டர் துறை சார்ந்தவர்கள்,அநாதை ஆசிரமங்களை நடத்துபுவர்கள்,தங்கம் வெள்ளி போன்ற நகை வியாபாரிகள்,இனிப்புத் தின்பண்ட வியாபாரிகள்,குழந்தைகள் காப்பகங்களை நடத்துபவர்கள்,உடல் ஊனமுற்றோருக்கான கல்விச் சாலைகளை நடத்துபவர்கள்,இனிசினியரிங் மற்றும் கம்யுட்டர் துறை சார்ந்த கல்லூரிப் பேராசிரியர்கள் ஆகியோர்கள் நல்ல லாபம் பெறுவார்கள் வெளிநாடு சென்று வருதல் போன்ற முயற்சிகளில் நல்ல தகவல்களை எதிர் பார்க்கலாம்.ஏப்ரல்19,20,21வங்கிகளில் இருந்து வரவேண்டிய பணம் மற்றும் வங்கி கடன் உதவிகள் கிடைக்கும்.விவசாயம் செய்வோர்கள் விவசாயத்தில் மிகுந்த கவனமுடன் இருத்தல் நல்லது.உத்தியோகதில் இடமாற்றம் ஏற்படும்.பெண்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.உடம்பில் நரம்பு எலும்பு சம்பந்தமான உபாதைகள் வந்து போகும். பழைய கடன்கள் அடைபடும்.ஏப்ரல்22யாத்திரைகளை விலக்குதல் நல்லது.உறவினர்களிடம் இருந்து தூ10ரத்து நற் செய்திகளை கேட்பீர்
கள்.திடீர் அதிர்~;டம் ஆகிய ரேஸ் லாட்டரி வழியாகத் தன வரவு உண்டாகும்.தீராத நாட்பட்ட வழக்குகள் தீர நல்ல முடிவுகள் கிடைக்கும்.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.
இராசியான எண்;-3
இராசியான நிறம்:-மஞ்சள்
இராசியான திசை:-வட கிழக்கு
பரிகாரம்:-வியாழக் கிழமையில் சிவ வழிபாடு செய்து கடலை தானம் செய்யவும்.
10மகரம்:-மகரராசி அன்பர்களே சூரியன் நன்மை தரும் கிரகமாகும்.ஏப்ரல்16,17மாணவர்கள்,அரசியல் வாதிகள்,பொது நலத் தொண்டுகள் செய்பவர்கள்,ஆலயப் பணியாளர்கள,மந்திரி பதவிகளை வகிப்பவர்கள்,மருந்துப் பொருட்களை விற்னை செய்வோர்கள்,மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள்,மருந்துப் பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்வோர்கள்,கண்ணாடி சம்பந்தமான பொருட்களை விற்பனை செய்வோர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள.தூரத்து யாத்திரைகளில் புதிய பெரிய மனிதர்கள் சந்திப்பால் மன நிம்மதி அடைய வாய்ப்புஉள்ளது.ஏப்ரல்18,19,20
அடுத்தவர்களின் விசயத்தில் தலையிட்டு மன நிம்மதியை இழுக்க வேண்டாம்.செய்தொழிலில் சில மாற்றங்கள் ஏற்படக் கூடும். கண்களில் கவனம் தேவை.நண்பர்களால் எதிர்பாராத பொருட் செலவுகள் உண்டாகும்.மாணவர்கள் கல்வியில் தேர்ச்சி அடைவர்.ஒரு சிலருக்கு புதிய வீடு மற்றும் வாகனம் வாங்க வாய்ப்பு உள்ளது.ஏப்ரல்21,22வெளிநாடு சென்று வருதல் போன்ற முயற்சிகளில் நல்ல தகவல்களை எதிர் பார்க்கலாம்.உத்தியோகத்தில் இட மாற்றம் ஏற்படும்.காதல் சம்பந்தமான விசயங்களில் எச்சரிக்கை தேவை.காணாமற் போன பொருட்கள் காவல் துறையினர்களின் உதவிகளால் திரும்பக் கிடைக்கும்.பூமி நிலம் சம்பந்தமாக வெகு காலமாகத் தடை பட்டு வந்த காரியங்களில் நல்ல முடீவுகள் கிடைக்கும்.விவசாயிகளுக்கு நல்ல லாபம் பெறுவர்.பொதுவாக இது ஒரு நற்பலன் தராத வாரமாகும்.
இராசியான எண்:-1
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை:-கிழக்கு
பரிகாரம்:-ஞாயிற்றுக் கிழமையில் சிவ வழிபாடு செய்து கோதுமை தானம் செய்யவும்.
11.கும்பம்:-கும்பராசி அன்பர்களே புதன் நன்மை தரும் கிரகமாகும்.ஏப்ரல்16,17புதிய கடன்களை வாங்கிப் பழைய கடன்களை அடைப்பதற்காக வெகு முயற்சிகளைச் செய்து கடனை அடைப்பீர்கள். வீடுகளைத் திருத்திக் கட்ட எண்ணுவீர்கள்.நெடு நாட்களாக வராத கடன் கொடுத்த பணம் திரும்ப கை வந்து சேரும்.உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வரவால் பொருட் செலவுகள் உண்டாகும்.ஏப்ரல்18,19,20
மாணவர்கள் கல்வியில் மிகுந்த கவனமுடன் இருப்பது நல்லது.ஒருசிலர் இருப்பிடம் விட்டு வெளியுர் செல்ல வாய்ப்பு உள்ளது.எழுத்தாளர்கள் கவிஞர்கள்,பாடலாசிரியர்கள்,நாடகக் கவைஞர்கள்,இலை, கீரை வகைகள்,மருந்துபொருட்கள் விற்பனையாளர்கள்,தபால் தந்தித் துறையை சார்ந்தவர்கள்,அச்சு இயந்திர சாலைகளை நடத்துபவர்கள், பேனா பென்சில் நோட்புக் சம்பந்தமான ஸ்டேசனரி வியாபாரிகள் ஆகியோர்கள் நல்ல பலன்களை அடைவார்கள்.பெரியவர்களின் நல்லாசிகள் கிடைக்கும்.ஏப்ரல்21,22பெண்களால் வட திசையில் இருந்து சில நற் செய்திகள் வந்து சேரும். துலை தூரப் பயணங்கள் மூலம் எதிர் பார்த்த காரியங்கள் கை கூடும்.தெய்வத் தொண்டுகளைப் பிரியமுடன் செய்வீர்கள்.அரசு சம்பந்தமாகிய வழக்கு விசயங்களில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கச் சற்று கால தாமதம் ஆகலாம்.நாட் பட்ட வசிசா சம்பந்தமான பிரச்சனைகள் தீரவுதற்கான காலமாகும்.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.
இராசியான எண்:-5
இராசியான நிறம்:-பச்சை
இராசியான திசை:-வடக்கு
பரிகாரம்:-புதன் கிழமையில் மஹாவிஷ்ணு வழிபாடு செய்து பாசிப் பயிறு தானம் செய்து வரவும்.
12.மீனம்:-மீனராசி அன்பர்களே சனி நன்மை தரும் கிரகமாகும்.ஏப்ரல்16தேவையற்ற விசயங்களில் தலையிட்டு மன நிம்மதி இழக்க வேண்டாம்.நீண்ட காலமாக வங்கிகளில் இருந்து எதிர்பார்த்து இருந்த கடன் உதவிகளி கிடைக்க வாய்ப்புகள் உள்ள காலமாகும்.விபரீதமான எண்ணங்களை விட்டுக் காரியத்தில் கவனமாய் இருங்கள்.சுய தொழில் செய்வதற்கான முயற்சிகளில் சற்று கால தாமதம் ஏற்படலாம்.ஏப்ரல்17,18,19மனைவி வழிச் சொந்த பந்தங்களால் பொருட் செலவு ஏற்படும்.கணவன் மனைவி உறவுகள் சுமாராக காணப்படும்.பழைய பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்வோர்கள்,மாமிச உணவுகளின் வுயாபாரிகள், இரும்பு இயந்திரம் இரசாயனம் சம்பந்தமாகிய தொழில்களை செய்வோர்கள்,
பலசரக்கு எண்ணை சம்பந்தமான வியாபாரிகள் ஆகியோர்கள் நற்பலன்களை அடைவார்கள். தந்தையால் பொருள் வரவு உண்டு.ஏப்ரல்20,21,22குல தெய்வ வழிபாட்டிற்காக வெளியுர் செல்லுவீர்கள்.தந்தை மகன் உறவில் சிற்சில பிரச்சனைகள் வரலாம். சகோதரர்களால் பொருள் வரவு உண்டாகும்.தாயின் உடல் நிலை பாதிப்பால் மருத்துவச் செலவுகள் உண்டு.பூர்வீகச் சொத்துக்கள் வந்து சேரும்.உற்றார் உறவினர்களால் ஆதாயம் இல்லை.கை விட்டுப் போன பொருட்கள் திரும்பக் கிடைக்கும். திடீர் அதிர்~;டமாகிய ரேஸ் லாட்டரி போன்றவற்றின் மூலமாகப் பொருள் வரவுகள் உண்டாகலாம்.பொதுவாக இதுஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.
இராசியான எண்:-8
இராசழயான நிறம்:-நீலம்
இராசியான திசை:-தெனமேற்கு
பரிகாரம்:-சனிக் கிழமையில் ஐயப்பன் வழிபாடு செய்து எள் சாதம் தானம் செய்து வரவும்.



