Tue10242017

Last updateTue, 24 Oct 2017 5am

Back You are here: Home

Articles

பண்டிட்டுகளைக் ஜம்மு-காஷ்மீருக்குத் திரும்புமாறு கெஞ்ச முடியாது!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்குத் திரும்புமாறு பண்டிட்டுகளைக் கெஞ்ச முடியாது என்றும், அது பற்றிய முடிவை பண்டிட்டுகள்தான் எடுக்க வேண்டும் என்றும் அந்த மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா கூறினார்.

 

 ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இருந்து காஷ்மீரி பண்டிட்டுகள் வெளியேறி 26 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி,

ஆங்கில தினசரி ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது:

 தற்போதைய பாஜக-பிடிபி கூட்டணி அரசு விரும்பினால், சொந்த மாநிலத்துக்கு காஷ்மீரி பண்டிட்டுகள் திரும்புவது குறித்து பண்டிட்டுகள், முஸ்லிம் தலைவர்கள் ஆகியோருடன் முத்தரப்பு பேச்சுவார்த்தையை நடத்தி, தீர்வு காண வேண்டும்.

 இதுதொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சராக அத்வானி இருந்தபோது முயற்சி எடுக்கப்பட்டு, ஏராளமான சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. அந்த அனுபவங்களை அத்வானி தனது சுயசரிதையில் எழுதியிருக்கிறார். அந்த அனுபவங்களை பாஜக தலைவர்கள் படிக்க வேண்டும்.

 ஜம்மு-காஷ்மீரில் பண்டிட்டுகள் மீண்டும் குடியேறுவது குறித்து அவர்கள்தான் முடிவெடுக்க வேண்டும். அவர்களை நாங்கள் கெஞ்சிக் கொண்டிருக்க மாட்டோம்.

 

 பண்டிட்டுகளுக்கு மாநில அரசு அறிவித்துள்ள மறுவாழ்வுத் திட்டங்களைப் பெறுவதற்கு, யாருமில்லை என்று கூறப்படுவது உண்மையல்ல. ஏராளமானோர் இங்கு திரும்பி வந்ததோடு, வசதியாகவும் வாழ்ந்து வருகின்றனர். நான் முதல்வராக இருந்தபோதும், அதன் பிறகும் பண்டிட்டுகளைச் சந்தித்து, மாநிலத்துக்குத் திரும்புமாறு அழைப்பு விடுத்துள்ளேன் என்றார் ஃபரூக் அப்துல்லா.