Sun01212018

Last updateMon, 22 Jan 2018 4am

Back You are here: Home

Articles

ஒடிசா கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கிய 150 ஆமைகள்

ஒடிசா மாநிலம் பூரி கடற்கரை அருகே 150-க்கும் மேற்பட்ட ஆலிவ் ரிட்லி ஆமைகள் மற்றும் பாட்டில்நோஸ் டால்பின்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கின. பந்தா நிவாஸ் அருகே கடற்கரையில் கிடந்த அந்த சடலங்களை வனத்துறை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.

 

கடல்பகுதியில் மீன்பிடி படகுகளால் தாக்கப்பட்டு ஆமைகள் உயிரிழந்து இருக்கலாம் என்றும் ஆமைகளின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளதாகவும் பூரி-பாலுகாந்த் வனத்துறை அதிகாரி சரத் சந்திரா பெஹரா கூறி உள்ளார்.

ஏராளமான ஆமைகள் முட்டையிடுவதற்காக ககிர்மாதா கடற்கரைக்கு வருகின்றன. எனவே, அதனை ஒட்டிய பகுதிகளில் சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவிற்கு மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் தடையையும் மீறி, மீனவர்கள் அப்பகுதியில் சட்டவிரோதமாக மீன்பிடிக்கின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

பூரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் அகர்வால் இதுபற்றி கூறுகையில், “இந்த அளவில் ஆமைகள் உயிரிழந்ததற்கான காரணம் என்பதை நாங்கள் முதலில் கண்டுபிடிக்க வேண்டும். இவ்விவகாரத்தை கவனத்தில் எடுத்துக் கொண்டு தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிக்களுக்கு உத்தரவிட்டு உள்ளோம்.” என்று கூறி உள்ளார்.

சமீபத்தில் தமிழகத்தில் திருச்செந்தூர் பகுதியில் திமிங்கலங்கள் கூட்டம், கூட்டமாய் கரை ஒதுங்கியது. மீனவர்கள், திமிங்கலங்களை உயிர்பிழைக்க செய்ய போராடியும், சுமார் 45-க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் உயிரிழந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

 

கடற்கரையில் மணல் சிற்பங்கள் செய்யும் சுதர்ஷன் பாட்நாயக் பேசுகையில், “இன்று, கடற்கரையில் நூற்றுக்கணக்கான ஆமைகள் இறந்து கிடந்ததை பார்த்தேன். இவ்வளவு அதிகமான அளவில் ஆமைகள் இறந்து கிடந்ததை பார்ப்பதற்கு மிகவும் கவலையாக இருந்தது.” என்று கூறிஉள்ளார். ஆமைகள் உயிரிழப்புக்கான காரணம் என்னவென்று அரசு கண்டுபிடிக்கவேண்டும் என தனது சிற்பம் மூலம் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், பொதுமக்கள் கடல்வாழ் உயிரினங்களை பாதுகாக்கவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.