Tue10242017

Last updateTue, 24 Oct 2017 5am

Back You are here: Home

Articles

‘மேட்ச் பிக்சிங்’ குற்றச்சாட்டில் இலங்கை பயிற்சியாளர் ‘சஸ்பெண்ட்’

இலங்கை மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு டெஸ்டில் கூட வென்றது கிடையாது. கடந்த ஆண்டு இங்கு சென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி காலே (அக்., 14–17) டெஸ்டில் களமிறங்கியது. இப்போட்டியில் ‘பிக்சிங்’ செய்ய முயற்சிகள் நடந்தன.

 

இதற்காக தங்களுக்கு தலா ரூ. 48 லட்சம் தர புக்கிகள் முன்வந்ததாக, விக்கெட் கீப்பர் குசல் பெரேரா, ஹெராத் வாக்குமூலம் தந்தனர்.

இப்போட்டியில் இலங்கை அணி இன்னிங்ஸ், 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதுதொடர்பாக நடந்த விசாரணையில் அணியின் பவுலிங் பயிற்சியாளர் அனுஷா சமரநாயகே, ‘பிக்சிங்’ செய்வது தொடர்பாக பல்வேறு வீரர்களை அணுகியது தெரியவந்தது.

இதையடுத்து சமரநாயகே 2 மாத காலத்துக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தவிர, வலைப்பயிற்சியில் பவுலிங் செய்த விஸ்வஜித் என்ற வீரருக்கு ஏற்கனவே வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.