Tue07262016

Last updateTue, 26 Jul 2016 1pm

தினபலன் (20.01.2016)

ராசி குணங்கள் மேஷம்

குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். அழகு, இளமைக் கூடும். உறவினர்கள் உங்களைப்

புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட்

ராசி குணங்கள் ரிஷபம்

ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைத் தூக்கும். வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள். சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும் சொந்த விஷயங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். யாருக்கும் உறுதிமொழி தர வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களால் பிரச்னைகள் வரும். உத்யோகத்தில் அலட்சியம் வேண்டாம். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா

ராசி குணங்கள் மிதுனம்

குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. அண்டை, அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்க்ள. எதிர்பாராத பயணங்களால் அலைச்சல் இருக்கும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் மோதல்கள் வரக்கூடும். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, பிங்க்

ராசி குணங்கள் கடகம்

குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்

ராசி குணங்கள் சிம்மம்

எதிலும் வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் உங்கள் ஆலோசனைகளை ஏற்பார்கள். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு

ராசி குணங்கள் கன்னி

கணவன்&மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிளிப்பச்சை

ராசி குணங்கள் துலாம்

சந்திராஷ்டமம் நீடிப்பதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்து நீங்கும். உறவினர், நண்பர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். நெருங்கியவர்கள் சிலரால் தர்மசங்கடமான சூழ்நிலையை சமாளிக்க வேண்டி வரும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். உத்யோகத்தில் அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா

ராசி குணங்கள் விருச்சிகம்

தன் பலம் பலவீனத்தை உணருவீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். மனைவிவழியில் மதிப்பு, மரியாதைக் கூடும். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் ஆதாயமடைவீர்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம்

ராசி குணங்கள் தனுசு

எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர், நண்பர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வீட்டை விரிவுப்படுத்துவது யோசிப்பீர்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே, வைலெட்

ராசி குணங்கள் மகரம்

குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். அக்கம்&பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம்

ராசி குணங்கள் கும்பம்

முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. தாய்வழி உறவினர்களுடன் மோதல்கள் வந்து நீங்கும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரே

ராசி குணங்கள் மீனம்

 

குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை