Sat10012016

Last updateSat, 01 Oct 2016 2pm

Back You are here: Home Using Joomla! Using Extensions Modules Navigation Modules Breadcrumbs விளையாட்டு/பொது கிரிக்கெட் டோனிக்கு எதிரான கைது வாரண்ட் உத்தரவை திரும்ப பெற்றது ஆந்திர நீதிமன்றம்

டோனிக்கு எதிரான கைது வாரண்ட் உத்தரவை திரும்ப பெற்றது ஆந்திர நீதிமன்றம்

கடந்த 2013-ம் ஆண்டு வெளியான மாத இதழ் ஒன்றில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் டோனியை மகாவிஷ்ணு போல சித்தரித்து அட்டைப்படம்

வடிவமைக்கப்பட்டிருந்தது. இது இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக உள்ளது என இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. அவர் மீது ஐதராபாத் மாநிலம் அனந்தபூர் நீதிமன்றத்தில் விஎச்பி ஷியாம் சுந்தர் வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கு கடந்த 7-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, டோனிக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. மேலும், வரும் பிப்ரவரி 25 ஆம் தேதிக்குள் டோனி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், டோனியின் வழக்கறிஞர்களான ரஜனிஷ் சோப்ரா, பங்கஜ் பாக்லா ஆகியோர் இன்று அனந்தபூர் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். அப்போது, தங்கள் கட்சிக்காரர் டோனிக்கு பிடிவாரண்ட் போய் சேரவில்லை என்று தெரிவித்தார். அவர்களின் கருத்தை ஏற்ற நீதிபதி கீதாவாணி, ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்டுக்கான உத்தரவை திரும்ப பெறுவதாக தெரிவித்தார்.

டோனி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருவதால், அவர் சார்பில் வழக்கறிஞர் விஷ்ணுவர்தன் ரெட்டி வக்காலத்து தாக்கல் செய்தார்.