Fri07012016

Last updateFri, 01 Jul 2016 4am

Back You are here: Home Using Joomla! Using Extensions Modules Navigation Modules Breadcrumbs செய்திகள் உலக செய்திகள் கடும் போட்டியை சந்திக்கும் ஹிலாரி கிளிண்டன்

கடும் போட்டியை சந்திக்கும் ஹிலாரி கிளிண்டன்

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளராக தெரிவாவதில் அந்நாட்டு ஜனநாயக கட்சியை சேர்ந்த ஹிலாரி கிளிண்டன் மற்றும் ஜனநாயக சோசலிச கட்சியை சேர்ந்த பெர்னி சாண்டர்ஸ் ஆகிய இருவருக்கும் கடும் போட்டி நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

அமெரிக்க ஜனாதிபதி பொது தேர்தலுக்கான வாக்கப்பதிவு எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி பதவிக்கு ஜனநாயக கட்சியை சேர்ந்த ஹிலாரி கிளிண்டன், ஜனநாயக சோசலிச கட்சியை சேர்ந்த பெர்னி சாண்டர்ஸ், குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்ட முக்கிய வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இந்த தேர்தலில் ஜனாதிபதியாக வெற்றி பெற வேண்டும் என்றால், முன்னதாக இந்த பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களை பொதுமக்கள் அதிகாரப்பூர்வமாக வாக்கெடுப்பின் மூலம் வேட்பாளராக தெரிவு (Nominate) செய்ய வேண்டும்.

இந்த வாக்கெடுப்பு முதன் முதலாக அமெரிக்க மாகாணங்களில் ஒன்றான அயோவாவில் எதிர்வரும் பெப்ரவரி 1ம் திகதி நடைபெற உள்ளது.

இந்த அயோவா மாகாணத்தில் ஹிலாரி கிளிண்டனிற்கு பெருமளவு ஆதரவு இருந்தாலும் கூட அவரது முக்கிய போட்டியாளரான பெர்னி சாண்டர்ஸ், ஹிலாரி கிளிண்டனிற்கு இணையான பலத்துடன் காணப்படுகிறார்.

எனவே, இந்த மாகாணத்தில் பெர்னி சாண்டர்ஸை வீழ்த்தினால் ஜனாதிபதி வேட்பாளராக தெரிவாவதில் ஹிலாரி கிளிண்டனிற்கு சிக்கல் இருக்காது.

ஆனால், அயோவாவில் பெரும் ஆதரவு பெற்றுருக்கும் பெர்னியை தற்போதைய ஜனாதிபதியான ஒபாமாவின் தேர்தல் வியூகங்களை அமைத்து தான் எதிர்க்கொள்ள வேண்டிய சூழல் ஹிலாரிக்கு ஏற்பட்டுள்ளது என்பதை மறுக்க முடியாது.

பெர்னியை வீழ்த்தி விட்டால், பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வரும் குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்ட் ட்ரம்பை எளிதில் வென்றுவிடலாம் என்பது தான் ஹிலாரியின் கணிப்பு.

அயோவா மாகாணம் மட்டுமின்றி இதற்கு அடுத்த வாக்கெடுப்பு நடைபெறும் New Hampshire மாகாணத்திலும் தனது சக்தியை நிரூபித்து விட்டால் ஜனாதிபதி வேட்பாளராக ஹிலாரி எளிதில் தெரிவாகலாம் என்பதால் இந்த இரு மாகாணங்களிலும் பலத்த போட்டி நிலவி வருகிறது.