Thu02112016

Last updateThu, 11 Feb 2016 12pm

Back You are here: Home

Articles

விளக்கமறியலில் இருந்த 14 தமிழக மீனவர்களை மன்னார் நீதிமன்றம் விடுதலை செய்தது.!

இலங்கை கடற்பரப்பினுள் அத்து மீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 14 தமிழக மீனவர்கள்  விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

 

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி மற்றும் ஜனவரி மாதம் 4 ஆம் திகதிகளில் கைது செய்யப்பட்ட நிலையில் மன்னார் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைவாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 14 பேர் இவ்வாறு இன்று செவ்வாய்க்கிழமை (19) மன்னார் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.

தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட 18 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு சட்டமா அதிபர் திணைக்களத்தினால் பணிப்புரை விடுக்கப்பட்ட நிலையில் நேற்று திங்கட்கிழமை 4 மீனவர்கள் மன்னார் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.

எனைய 14 தமிழக மீனவர்களும் இன்று மன்னார் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.

விடுதலை செய்யப்பட்ட 14 தமிழக மீனவர்களும் மன்னார் மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் குறித்த மீனவர்களை இந்திய துனைத்தூதரக அதிகாரிகள் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளதாக மன்னார் மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்கள உதவிப்பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.