Tue09232014

Last update12:14:45 PM

Font Size

Profile

Menu Style

Cpanel
Back விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட் இலங்கை அணி தோல்வி * நியூசி., அபாரம்

இலங்கை அணி தோல்வி * நியூசி., அபாரம்

 

கொழும்பு:  கொழும்பு டெஸ்டில் சொதப்பிய இலங்கை அணி, நியூசிலாந்திடம் 167 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன்மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட்

தொடர் 1-1 என்ற கணக்கில் சமன் ஆனது.

 

இலங்கை சென்ற நியூசிலாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. காலேயில் நடந்த முதல் டெஸ்டில் வெற்றி பெற்ற இலங்கை அணி 1-0 என முன்னிலை வகித்தது. இரண்டாவது டெஸ்ட் கொழும்புவில் நடந்தது. முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 412, இலங்கை 244 ரன்கள் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுக்கு 194 ரன்கள் எடுத்து "டிக்ளேர்' செய்தது. நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் 2வது இன்னிங்சில் இலங்கை அணி 4 விக்கெட்டுக்கு 47 ரன்கள் எடுத்திருந்தது.

மாத்யூஸ் ஆறுதல்:

நேற்று 5வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. இலங்கை பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து ஏமாற்றினர். சமரவீரா (7) "ரன்-அவுட்' ஆனார். பிரசன்னா ஜெயவர்தனா (29), சுராஜ் ரந்திவ் (0), குலசேகரா (18) சொற்ப ரன்களில் வெளியேறினர். போராடிய மாத்யூஸ் 84 ரன்களுக்கு அவுட்டானார்.

இரண்டாவது இன்னிங்சில் இலங்கை அணி 195 ரன்களுக்கு சுருண்டு தோல்வி அடைந்தது. ஆட்ட நாயகன் விருது நியூசிலாந்து கேப்டன் ராஸ் டெய்லருக்க வழங்கப்பட்டது. தொடர் நாயகன் விருதை இலங்கையின் ஹெராத் பெற்றார்.

14 ஆண்டுகளுக்கு பின்...

இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி 14 ஆண்டுகளுக்கு பின் இலங்கை மண்ணில் முதல் வெற்றியை பதிவு செய்தது. கடைசியாக 1998ல் கொழும்பு, பிரேமதாசா மைதானத்தில் நடந்த டெஸ்டில் பிளமிங் தலைமையிலான அணி 167 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியிலும் நியூசிலாந்து அணி 167 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஒற்றுமையான விஷயம்.

* கடைசியாக 5 டெஸ்டில் (எதிரணி: வெஸ்ட் இண்டீஸ்-2, இந்தியா-2, இலங்கை-1) சந்தித்த தொடர் தோல்விக்கு நியூசிலாந்து முற்றுப்புள்ளி வைத்தது.