Wed06192013

Last update12:00:00 AM

Font Size

Profile

Menu Style

Cpanel

காணொளி 2

Video 1

Back விளையாட்டு விளையாட்டு மற்றயவை காலிறுதியில் தருண், அஷ்வினி ஜோடி

காலிறுதியில் தருண், அஷ்வினி ஜோடி

 

மக்காவ்: மக்காவ் ஓபன் பாட்மின்டன் தொடரின் காலிறுதிக்கு இந்தியாவின் தருண் கோனா, அஷ்வினி பொன்னப்பா ஜோடி முன்னேறியது.

 

சீனாவில் நடக்கும் இத்தொடரின் கலப்பு இரட்டையர் பிரிவின் இரண்டாவது சுற்றில் தருண், அஷ்வினி ஜோடி, சீன தைபேயின் ஜி லின், ஹிசயோ ஜோடியை எதிர்கொண்டது. இதன் முதல் செட்டை தருண், அஷ்வினி ஜோடி 21-17 என வென்றது. இரண்டாவது செட்டை 22-20 என கைப்பற்றியது. முடிவில் தருண், அஷ்வினி ஜோடி 21-17, 22-20 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்குள் நுழைந்தது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவின் மூன்றாம் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், சோங் ஹானை 21-17, 15-21, 21-12 என வீழ்த்தினார்.

ஆண்கள் இரட்டையர் பிரிவின் இரண்டாம் சுற்றில் தருண் கோனா, அருண் விஷ்ணு ஜோடி, பிலிப்பைன்சின் ரொனால், பால் ஜெப்பர்சன் ஜோடியிடம் 21-15, 19-21, 22-24 என தோல்வியடைந்தது.

பெண்கள் இரட்டையர் பிரிவின் இரண்டாம் சுற்றில் இந்தியாவின் பிரட்னயா, அஷ்வினி ஜோடி, தாய்லாந்தின் ரோட்ஜனா, சந்திதா ஜோடியை 25-23, 21-19 என்ற நேர் செட் கணக்கில் வென்றது.