Sun01212018

Last updateMon, 22 Jan 2018 4am

Back You are here: Home

Articles

வாரபலன் (18.01.2016 முதல் 24.01.2016 வரை)

மேஷம்: எடுத்த செயல்களில் நன்மைகள் கிடைத்தாலும் அடுத்தவர்களை சார்ந்திருக்க நேரும். உங்கள் வேலைகளை சரியான நபர்கள் மூலம்

சாதித்து கொள்வது அவசியம். பெண்களால் நன்மை ஏற்படும். பேச்சில் கோபம் வெளிப்படும். குடும்பத்தில் சலசலப்புகள் இருக்கும். பொருளாதார நிலை முன்னேற்றம் காணும். உடன்பிறந்தோர் உதவிகரமாக இருப்பார்கள். வாகனங்களால் செலவுகள் கூடும். பிள்ளைகளின் செயல்கள் மன வருத்தம் தரும். உடல்நிலை சீராகும். வாழ்க்கைத்துணையின் பிடிவாதம் வருத்தம் தரும். முக்கியமான குடும்பப் பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். கவுரவ செலவுகள் அதிகரிக்கும். குடும்ப நண்பர்களுடனான சந்திப்பு மகிழ்ச்சி தரும். தொழில்முறையில் உங்கள் ஆலோசனைகள் வெற்றி பெறும். உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் நற்பெயர் கிடைக்கும். ஆயினும் தனலாபத்திற்காக சிறிது காலம் காத்திருக்க வேண்டியிருக்கும். கலைத்துறையினர் வெளியூர் நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேரிடும். சரிசம பலன்களை அடையும் வாரம் இது.

வழிபாடு: தைப்பூச நாளில் முருக பக்தர்களுக்கு அன்னதானம் செய்யவும்

ரிஷபம்: குடும்ப செலவுகள் அதிகரிக்கும். குறைந்த விலை பொருட்களை கூடுதல் விலை கொடுத்து வாங்க நேரும். குடும்பத்தில் சலசலப்புகள் தோன்றும். உடன்பிறந்தோருடன் கருத்து வேறுபாடு உண்டாகும். தகவல் தொடர்பு சாதனங்களால் இழப்புகள் ஏற்படும். வாகனங்களை இயக்கும்போது கூடுதல் கவனம் தேவை. வாகன பராமரிப்பு செலவுகள் கூடும். பிரயாணத்தின்போது கூடுதல் எச்சரிக்கை தேவை. பிள்ளைகளால் கவுரவம் உயரும். மன அழுத்தத்தால் உடல்நிலை பாதிக்கப்படும்பெற்றோர் மற்றும் வாழ்க்கைத்துணையோடு உண்டான கருத்து வேறுபாட்டை களைய முயற்சிப்பீர்கள். தொழில்முறையில் கூடுதல் அலைச்சல் ஏற்படும். உத்யோகஸ்தர்களுக்கு உடன் பணிபுரிவோர் ஒத்துழைக்க மறுப்பர். வியாபாரிகள் எதிர்பார்க்கும் தனலாபத்தினை அடைய சிறிது காலம் காத்திருக்க வேண்டியிருக்கும். தடைகளை தகர்த்து சங்கடங்களை தாண்டி முன்னேற வேண்டிய வாரம் இது.   

வழிபாடு: செவ்வாய் அன்று ஆஞ்சநேயருக்கு துளசிமாலை சாற்றி வழிபடவும்.

மிதுனம்: புத்திகூர்மை, திறமையான பேச்சால் காரிய சாதனை இருக்கும். பேச்சில் இனிமை இருக்கும். புதிய சேமிப்புகளில் ஈடுபடலாம். கடன்கள் முடிவிற்கு வரும். குடும்பத்தில் சலசலப்புகள் தோன்றி மறையும். மறைமுக எதிரிகள் குடும்பப் பிரச்னைகளில் தலையிடுவதை தவிர்க்கவும். ருசியான உணவுகளில் நாட்டம் கூடும். தைரியத்தால் கவுரவம் உயரும். உடன்பிறந்தோருடன் கருத்து வேறுபாடு தோன்றும். வண்டி, வாகன ஆதாயம் உண்டு. பிள்ளைகளோடு உரையாடி மகிழ்வீர்கள். உஷ்ணத்தால் உடல் நலம் பாதிப்படையும். வாழ்க்கைத்துணையின் ஆலோசனைகள் உங்கள் வெற்றிக்கு உதவும். பிடித்தமான பொருட்களை கூடுதல் விலை கொடுத்து வாங்குவீர்கள். பூர்வீக சொத்துகள் அனுகூலம் தரும். பெற்றோரின் உடல்நிலையில் கவனம் தேவை. தொழிலில் திறமையான பேச்சால் வெற்றி காண்பீர்கள். உத்யோகஸ்தர்கள், கலைஞர்களுக்கு லாபம் கிடைக்கும். நற்பலன்களை விளைவிக்கும் வாரம் இது.   

வழிபாடு: புதன் அன்று பெருமாள் தரிசனம் நன்மை தரும்.

கடகம்: நற்சிந்தனைகள் கூடும். பொருளாதார நிலை உயரும். குடும்ப சலசலப்பை போக்க முயற்சிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். பேச்சில் நிதானம் இருக்கும். உடன்பிறந்தோரின் நல்வாழ்விற்காக உங்களால் ஆன உதவியை செய்வீர்கள். தகவல் தொடர்பு சாதனங்களால் மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் வரும். வண்டி, வாகனங்களை புதிதாக மாற்றுவீர்கள். புதிய வீடு கட்டும் முயற்சியில் உள்ளோருக்கு நேரம் சாதகமாக இருக்கும். பிள்ளைகளின் உடல்நிலையில் கவனம் தேவை. வாழ்க்கைத்துணையோடு கருத்து வேறுபாடு தோன்றி மறையும். அவரது ஆலோசனைகள் நடைமுறை வாழ்க்கையில் வெற்றி பெறும். அநாவசிய செலவுகள் முற்றிலும் கட்டுப்படும். தகப்பனார் வழி சொத்துகளில் பிரச்னைகள் தோன்றும். திடீர் தொலைதூரப் பிரயாணம் இருக்கும். தொழில்முறையில் அலைச்சல் கூடினாலும் அதற்கான நற்பலன்கள் உடனடியாக கிடைக்கும். கலைத்துறையினர் போட்டிகளில் வெற்றி காண்பர். நற்பலன்களைக் காணும் வாரம் இது.

வழிபாடு: பவுர்ணமி நாளில் சிவாலய பிரதட்சிணம் நன்மை தரும்.

சிம்மம்: சங்கடங்களை சமாளிக்க வேண்டியிருக்கும். கவுரவத்திற்கு இழுக்கு உண்டாகாமல் இருக்க எச்சரிக்கை தேவை. எதிலும் அவசரம், பேராசையை தவிர்க்கவும். கடன் பிரச்னைகள் தலைதூக்கும். குடும்பத்தில் சொத்து சம்பந்தப்பட்ட விவகாரங்களால் மன நிம்மதி கெடும். உடன்பிறந்தோர் உதவியாய் இருப்பர். தகவல் தொடர்பு சாதனங்களால் நன்மை கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான முயற்சிகள் பலன் தரும். பிள்ளைகளின் வாழ்க்கை தரம் உயரும். உடல்நிலையில் புதுபுதுப் பிரச்னைகள் ஏற்படும். மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். சமுதாயத்தில் மரியாதைக்குரியவர்களை  சந்திப்பீர்கள். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் வாங்குவீர்கள். குறைந்த விலை பொருட்களை கூடுதல் விலை கொடுத்து வாங்க நேரிடும். தொழில் முறையில் உடன் பணிபுரிவோரின் துணையோடு காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள். கலைத்துறையினர் கற்பனையை நிறைவேற்றி சாதிப்பர். சரிசம பலனைக் காணும் வாரம் இது.

வழிபாடு: தந்வந்திரியை வழிபட்டு வர ஆரோக்கியம் சிறக்கும்.

கன்னி: குழப்பங்கள் விலகி ஸ்திரமான முடிவுகள் எடுப்பீர்கள். எடுத்த செயல்களில் சுறுசுறுப்பு, வேகம் கூடும். பொருளாதார நிலை சீராக இருக்கும். எதிலும் நிதானம், பொறுமை காப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். உடன்பிறந்தோருக்கு உதவி செய்வீர்கள். தகவல் தொடர்பு சாதனங்களால் நன்மை கிடைக்கும். பிள்ளைகளின் வாழ்வில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். திடீர் விருந்தினர் வருகை இருக்கும். குடும்பத்தினரின் மகிழ்ச்சிக்காக கேளிக்கை, கொண்டாட்டங்கள், சுற்றுலா செல்வீர்கள். உடல்நிலை உஷ்ணத்தால் பாதிப்படையும். வாழ்க்கைத்துணையின் விருப்பத்தை நிறைவேற்ற மிகுந்த முக்கியத்துவம் அளிப்பீர்கள். அண்டை, அயலாருடன் சுமுக உறவு நிலவும். பூர்வீக சொத்துகளில் புதிய வில்லங்கம் முளைக்கும். வாகன ஆதாயம் இருக்கும். தொழிலில் ஸ்திரத் தன்மை இருக்கும். அலுவலகத்தில் உத்யோகஸ்தர்களின் ஆலோசனைகள் வெற்றி பெறும். கலைஞர்களுக்கு லாபம் கூடும். நற்பலன்களை விளைவிக்கும் வாரம் இது.

வழிபாடு: வெள்ளியன்று காமதேனு பூஜை செய்து வழிபடவும்.

துலாம்: எதிலும் தனித்துச் சுயமாகச் செயல்பட நினைப்பீர்கள்தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். பேச்சில் கோபம் வெளிப்படும். குடும்பத்தில் சிறு சிறு சலசலப்புகள் வரும். பொருளாதார நிலையில் தேக்க நிலை இருந்தாலும் செலவுகளை சமாளிப்பதில் சிரமங்கள் இருக்காது. தகவல் தொடர்பு சாதனங்கள் தொழில்முறையில் மிகுந்த பயன் தரும். உடன்பிறந்தோர் உதவியாய் இருப்பர். ருசியான உணவுகளில் நாட்டம் கூடும். பிரயாணத்தின்போது உடன் பயணிப்போருடன் கூடுதல் கவனம் அவசியம். சிந்தனையில் ஏற்படும் தடுமாற்றத்தை தவிர்க்கவும். பிள்ளைகள் குறித்த ஏக்கம் வரும். அஜீரணக் கோளாறுகளால் உடல்நிலையில் சுணக்கம் உண்டாகும். வாழ்க்கைத்துணையின் உறவினர்களுக்கு உதவி செய்ய வேண்டிய சூழல் தோன்றும். அநாவசிய செலவுகள் கட்டுப்பட்டாலும் அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். தொழிலில் அலைச்சல் கூடினாலும் அதற்குரிய பலன்கள் கிடைக்கும். கலைஞர்கள் புதிய வாய்ப்பிற்காக காத்திருக்க நேரும். சாதக பாதகங்கள் கலந்த வாரம் இது.

வழிபாடு: மாரியம்மனை வழிபட்டு வர மனக்கவலை தீரும்.

விருச்சிகம்: தொழில் முன்னேற்றத்தால் வாழ்க்கை தரம், மதிப்பு மரியாதை, சேமிப்பு உயரும். குடும்ப பெரியவர்களோடு கருத்து வேறுபாடு ஏற்படும். விருப்பங்கள் நிறைவேறும். திடீர் பிரயாணங்கள் இருக்கும். உடன்பிறந்தோருக்கு உதவுவீர்கள். தகவல்தொடர்பு சாதனங்களால் அலைச்சல் குறைந்து முக்கிய பணிகளில் வெற்றி கிடைக்கும். வாகனங்கள், பிரயாணங்களால் ஆதாயம் உண்டு. ஆடம்பர பொருட்கள் வாங்குவதிலும், வீட்டை அழகுபடுத்துவதிலும் தனி கவனம் செலுத்துவீர்கள். பிள்ளைகளின் செயல்கள் வருத்தம் தரும். வாழ்க்கைத்துணையோடு கருத்து வேறுபாடு தோன்றும். நண்பர்களை நம்பி ஒப்படைத்த காரியங்களில் தேக்கம் ஏற்படும். செலவுகள் கட்டுக்குள் வரும். அயல்நாட்டிலிருந்து எதிர்பார்த்துக் காத்திருந்த செய்தி வந்து சேரும். தொழிலில் உங்கள் செயல்திட்டங்கள் வெற்றி பெறும். உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரிகளுக்கு கூடுதல் லாபத்தோடு நற்பெயரும் கிடைக்கும். கலைத்துறையினர் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நற்பலன்களைக் காணும் வாரம் இது.

வழிபாடு: பவுர்ணமி நாளன்று சத்யநாராயண பூஜை செய்து வழிபடவும்.

தனுசு: செயல் வேகம், விவேகம் கூடும். மனதில் நற்சிந்தனைகள், மகிழ்ச்சியான எண்ணங்கள் உருவாகும். பொருளாதார நிலை உயரும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் தோன்றி மறையும். பேச்சில் கடுமையை தவிர்ப்பது அவசியம். உடன்பிறந்தோர் உதவியாக இருப்பர். தகவல்தொடர்பு சாதனங்களால் பணிகளில் வெற்றி கிடைப்பதோடு நேரம், அலைச்சல் மிச்சமாகும். வண்டி, வாகனங்களால் ஆதாயம் காணும் அதே நேரத்தில் அநாவசிய பிரயாணங்களைத் தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளால் கவுரவம் உயரும்படியான சம்பவங்கள் நடைபெறும். அவர்கள் வாழ்வில் சுபநிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை செய்வீர்கள். உடல்நிலை சீராக இருக்கும். வாழ்க்கைத்துணை பக்கபலமாக செயல்படுவார். எதிர்பாராத திடீர் செலவுகள் ஏற்படும். அந்நிய தேசத்தில் பணிபுரிவோர் குடும்பத்தினரை சந்திக்கும் வாய்ப்பு உருவாகும். உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் அமைதியான சூழல் நிலவும். கலைத்துறையினருக்கு ஏற்றமான நேரம் இது. கனவுத் தொல்லையால் உறக்கம் கெடும். நற்பலன்களைத் தரும் வாரம் இது.

வழிபாடு: தை கிருத்திகை நாளன்று விரதம் இருந்து ஆறுமுகனை வணங்கவும்.

மகரம்: நினைத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். எடுத்த பணிகளை திட்டமிட்டு, விவேகத்துடன்  செயல்படுத்தி வெற்றி காண்பீர்கள். நற்பெயர் கிடைக்கும். எதிலும் சாதகமான பலன்கள் ஏற்படும். பொருளாதார நிலை உயரும். கொடுக்கல் வாங்கலை முற்றிலும் தவிர்க்கவும். உடன்பிறந்தோரால் தொல்லைகளை சந்திக்க நேரும். தகவல்தொடர்பு சாதனங்கள் முக்கியமான நேரத்தில் செயலிழந்து சிரமம் தரும். வண்டி, வாகனங்கள் பயன் தரும். அதே நேரத்தில் பராமரிப்பு செலவு கூடும். பிரயாணங்களால் அனுகூலம் உண்டு. பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்ற கூடுதலாக செலவழிப்பீர்கள். தொடர் பணிகளால் உடல்நிலை பாதிப்பு ஏற்படும். வாழ்க்கைத்துணையின் செயல்கள் உங்கள் வெற்றிக்கு உறுதுணையாய் அமையும். கலைஞர்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும். தொழிலில் எதிர்பார்த்த வெற்றியும், தனலாபமும் கிடைக்கும். விவேகத்தோடு செயல்பட்டு வெற்றி காணும் வாரம் இது.

வழிபாடு: அங்காள பரமேஸ்வரியை வழிபட்டு வாருங்கள்.

கும்பம்: குழப்பங்கள் அதிகரிக்கும். அவற்ைற ஒதுக்கி விட்டு தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். எடுத்த காரியங்களில் தடைகளை தாண்டி வெற்றி பெற வேண்டியிருக்கும். எந்த ஒரு விஷயத்தையும் செய்து முடிக்க ஒருமுறைக்கு இருமுறை அலைய வேண்டியிருக்கும். வரவு திருப்தி அளித்தாலும் கூடுதல் செலவுகள் ஏற்படும். சேமிப்பு கரையும். உடன்பிறந்தோரால் உபத்திரவங்கள் உருவாகக்கூடும். நண்பர்களிடம் எச்சரிக்கை அவசியம். திடீர் விருந்தினர்களால் வீட்டில் சலசலப்பு தோன்றும். வண்டி, வாகன பயணங்கள் ஆதாயம் தரும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக கூடுதலாக செலவழிப்பீர்கள். அவர்கள் பிடிவாதம் மனவருத்தம் தரும். நீங்கள் நினைப்பது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் ஆகி வருத்தம் தரும். டென்ஷனால் உடல்நிலை பாதிக்கப்படலாம் என்பதால் கவனம் அவசியம். வாழ்க்கைத்துணையுடன் கருத்துவேறுபாடு தோன்றும். உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் சோதனைகளை சந்திக்க நேரும். மொத்தத்தில் சிரமத்தை சமாளித்து வெற்றி காணும் வாரமாக அமையும்.

வழிபாடு: விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபடவும்.

மீனம்: எதிர்பார்த்த காரியங்கள் இழுபறி தரும். ஆயினும் ஒரு விஷயம் உங்கள் எதிர்கால வாழ்விற்கு முக்கியமான திருப்புமுனையாக அமையும். கவுரவம் உயரும். எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் மனதை ஆக்கிரமிக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். கறாரான பேச்சு அடுத்தவர் மனதை புண்படுத்தும். பொருளாதார நிலை உயரும். பிரயாணத்தின்போது புதிய நண்பர்கள் சேர்க்கை இருக்கும். தகவல் தொழில் நுட்ப சாதனங்கள் பல்வேறு வழிகளிலும் உங்களுக்கு உதவியாக அமையும். வாழ்க்கைத்துணையின் வார்த்தைகள் உங்களுக்கு சிறந்த ஆலோசனையாக அமையும். நண்பர்களால் நன்மை உண்டு. குடும்ப செலவுகள் அதிகரிக்கும். குடும்பப் பெரியவர்களுடன் கருத்து வேறுபாடு தோன்றும். ஆன்மிகப் பெரியோர்களுடனான சந்திப்பு மன அமைதி தரும். உத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு இருக்கும். கலைத்துறையினர் புதிய முயற்சிகளில் வெற்றி காண்பர். வியாபாரிகள் சிறப்பான தனலாபம் கண்டாலும், மீண்டும் தொழிலில் முதலீடு செய்ய நேரும். பிள்ளைகளால் கவுரவம் உயரும். நற்பலன்களை காணும் வாரம் இது.

 

வழிபாடு: ஞாயிறு அன்று சரபேஸ்வரரை வழிபடவும்.