Tue03282017

Last updateTue, 28 Mar 2017 5am

Back You are here: Home

Articles

அசாம் பிரச்சினைகளுக்கு 15 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியே காரணம்: மோடி

அசாம் மாநிலத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, 15 ஆண்டுகால கங்கிரஸ் ஆட்சியே அம்மாநிலத்தின் பின்னடைவுக்குக் காரணம் என்று சாடினார்.

 

கோக்ரஜாரில் போடோபாநகரில் அவர் கூட்டமொன்றில் பேசியபோது, “ஒரே ஆட்சி 15 ஆண்டுகள் நடைபெற்ற போதும் , 10 ஆண்டுகள் பிரதமரையே மாநிலங்களவை பிரதிநிதியாகக் கொண்ட மாநிலமாக இருந்த போதும் அசாம் ஏன் இவ்வளவு பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டும்? இந்த 15 ஆண்டுகளில் அவர்கள் ஒன்றுமே செய்யவில்லை. ஆனால் தற்போது அவர்கள் ஏற்படுத்திய பிரச்சினைகளை நாங்கள் 15 மாதத்தில் சரி செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். இது எனக்கு நியாயம் செய்யவில்லை என்று நீங்கள் நினைக்கவில்லையா?

எனது ஆட்சி பற்றி அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் கடந்த 15 ஆண்டுகளாக அசாமில் நீங்கள் என்ன செய்துவிட்டீர்கள்? அதுவும் 10 ஆண்டுகள் மாநிலத்தை ராஜ்ய சபாவில் பிரதிநித்துவம் செய்த பிரதமர் இருந்த போது? மக்களைக் குழப்பவே அவர்கள் விரும்புகின்றனர். அவர்களது 15 ஆண்டுகால ஆட்சியையும், எங்களது 15 மாத ஆட்சியையும் நீங்களே ஒப்பிட்டு பாருங்கள். பெரிய வித்தியாசத்தை நீங்கள் உணர்வீர்கள்.

அனைத்துப் பிரச்சினைகளுக்கும் வளர்ச்சியே தீர்வு. எனவே இப்பகுதியின் வளர்ச்சிக்கும், மக்களின் ஆசை மற்றும் கனவுகளை நிறைவேற்ற எனது இருதயம் மற்றும் கரங்களை நீட்டுகிறேன் என்றார்.

சமவெளியில் வாழும் கார்பி மற்றும் மலைவாழ் போடோ இனமக்களுக்கு பழங்குடி அந்தஸ்து அளிக்கப்படும் என்றும் இதற்கான நடைமுறைகள் ஏற்கெனவே தொடங்கியாகிவிட்டது என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.