Fri06232017

Last updateFri, 23 Jun 2017 3pm

Back You are here: Home

Articles

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மக்களை நம்பவைத்து மோசடி செய்துவிட்டன: திருமாவளவன்

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் தமிழக மக்களை நம்ப வைத்து மோசடி செய்துவிட்டன என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.

 

வழக்கு விசாரணைக்காக நேற்று விருத்தாசலம் நீதிமன்றத்துக்கு வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், அங்கு நிருபர்களிடம் கூறியதாவது: பொங்கல் பண்டிகையில் நடந்த விளையாட்டு போட்டிகளில் பல இடங்களில் தலித்துகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

விருத்தாசலம் அருகே கம்மாபுரம் கிராமத்தில் விமல்ராஜ் என்ற இளைஞர் மர்மமான முறையில் இறந்துள்ளார். இந்தக் கொலையை காவல்துறை தற்கொலை என வழக்கம்போல் வழக்கு பதிவு செய்துள்ளது. இது கொலை வழக்கு, தொடர்ந்து காவல் துறையும், அதிமுக அரசும் தலித்துகளுக்கு எதிரான போக்கை கடைப்பிடித்து வருகிறது.

ஜனவரி 26-ம் தேதி மதுரையில் மாநில மாற்று அரசியல் எழுச்சி மாநாடு நடக்கவுள்ளது. இதில் இந்திய அளவில் கம்யூனிஸ்ட் தலைவர்களும், மக்கள் நல கூட்டியக்கத்தை சேர்ந்த தலைவர்களும் பங்கேற்க உள்ளனர். இந்த மாநாடு புதிய ஆட்சி மாற்றத்திற்கான திருப்புமுனையாக இருக்கும். தமிழக மக்கள் திமுக, அதிமுக அள்ளாத மாற்றத்தை எதிர்பாக்கின்றனர். அந்த மாற்றம் மக்கள் நல கூட்டியக்கமாக இருக்கும்.

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் தமிழக மக்களை நம்பவைத்து நாடகமாடி மோசடி செய்துவிட்டனர். தமிழக மக்களின் உணர்வுகளுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர். ஒரு சில மாவட்டங்களில் மட்டும் நடக்கின்ற விழா என்று கூறுவது தவறு.

தமிழர்களின் பாரம்பரியத்தை கூறுகின்ற விளையாட்டு, நீதிமன்றத்தில் இந்த வழக்கை தமிழக அரசு சரியான தகவல்களை தந்து விரைந்து முடிக்க தவறிவிட்டது. இதில் சட்ட சிக்கல் இருக்கின்றது என தெரிந்தும் மத்திய அரசு நாடகமாடியிருக்கிறது. ஜல்லிக்கட்டு போன்ற தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளை பாதுகாக்க மக்கள் நல கூட்டியக்கம் பாடுபடும், என்றார்.