Sun02072016

Last updateSun, 07 Feb 2016 2pm

Back You are here: Home Using Joomla! Using Extensions Modules Content Modules செய்திகள் இந்தியச் செய்திகள் தடையை மீறி ஜல்லிக்கட்டு சீமான் கைது

தடையை மீறி ஜல்லிக்கட்டு சீமான் கைது

நாம் தமிழர் கட்சி சார்பில்  தடையை மீறி மதுரை மாவட்டம் பாலமேட்டில் இன்று ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என கட்சியின் ஒருங்கிணைப்பாளர்

சீமான் அறிவித்தார்.இதனைத்தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் இன்று, போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.பாலமேட்டில் காளைகளை அவிழ்த்து விடும் வாடி வாசல் பகுதியிலும் ஆயுதம் ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டனர்.

மேலும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சிலர் இரவோடு இரவாக கைது செய்யப்பட்டனர். இந்த  நிலையில் கட்சியின்  ஒருங்கிணைப்பாளர் சீமான் மதுரை வந்தார். இன்று காலை  அவர் தங்கியிருந்த  பைபாஸ் ரோடு ஓட்டலுக்கு போலீசார் சென்றனர். அங்கிருந்து வெளியே வந்த சீமானை அவர்கள் தடுத்து நிறுத்தினர். அப்போது  போலீசாரிடம் பேசிய சீமான், தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தினால்தான் எங்களை கைது செய்ய வேண்டும். இப்போது நான் பாலமேடு செல்கிறேன் என கூறி னார்.

இதனைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்யவில்லை. அங்கிருந்த  புறப்பட்ட சீமான், நிருபர் களிடம் பேசுகையில், எங்கள்  அமைப்பின் புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்த  நிர்வாகிகள் 20 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். எந்த  தடையையும் மீறி ஜல்லிக் கட்டை நடத்துவோம் என்று கூறிச்சென்றார். இந்த நிலையில் மதுரை அருகே உள்ள பாசிங்காபுரம் பகுதியில் அவரது காரை  தடுத்து  நிறுத்திய போலீசார் சீமானை கைது செய்தனர். அவருடன் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சுமார் 50 பேர் கைது செய் யப்பட்டனர்.