Sun07242016

Last updateMon, 25 Jul 2016 12am

Back You are here: Home Using Joomla! Using Extensions Modules Display Modules செய்திகள் பொது/சிறப்பு செய்திகள் இயக்குனர் மனோபாலாவுக்கு அம்மா போட்ட உத்தரவு!

இயக்குனர் மனோபாலாவுக்கு அம்மா போட்ட உத்தரவு!

தன்னை திட்டுபவர்களையும், விமர்சிப்பவர்களையும் பற்றி கூட்டங்களில் விமர்சித்து பேச வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளதாக பிரபல இயக்குனர் மனோபாலா தெரிவித்துள்ளார்.

 

அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்ஜிஆர்-ன் 99வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் தஞ்சாவூரில் நடந்தது.

இந்த கூடத்தில் அதிமுக பேச்சாளரும், இயக்குனருமான மனோபாலா கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், எம்ஜிஆர் முதல்வராக இருந்த போது தான் வாழ்ந்த கும்பகோணத்துக்கு வந்தார். அங்கு ஒரு குறிப்பிட்ட வீட்டில் தங்க வேண்டும் என்றார்.

அவருடன் வந்த உதவியாளர், நமக்கு எவ்வளவோ இடம் இருக்கும் போது நீங்க ஏன் அந்த வீட்டில் தங்குறீங்க? என்று கேட்டார்.

நான் இரண்டாம் வகுப்பு படிக்கும் போது இந்த வீட்டினர் தான் உதவுனாங்க, அதனால் தான் என்றாராம். இப்படி பேசிக்கொண்டிருக்கையில் தொண்டர் ஒருவர் வந்து கருணாநிதி, ஸ்டாலின் பத்தி பேசுங்க என முணுமுணுத்துள்ளார்.

இதற்கு பதிலளித்த மனோபாலா, ஏம்பா இது தலைவரோட பிறந்தநாள் கூட்டம், அவரைப் பற்றி பேசுறேன், தன்னை திட்டுபவர்களையும் விமர்சிப்பவர்களையும் நீங்க விமர்சித்து பேச வேண்டும் என்று தான் அம்மா உத்தரவு போட்டு இருக்காங்க. திட்டங்களையும், சாதனைகளையும் பற்றி பேச அமைச்சர்கள் இருக்காங்க என்று தெரிவித்தார்.