Thu09292016

Last updateThu, 29 Sep 2016 9am

Back You are here: Home Using Joomla! Using Extensions Modules Navigation Modules Breadcrumbs செய்திகள் பொது/சிறப்பு செய்திகள் பொங்கல் பண்டிகையின்போது ரூ.365 கோடிக்கு மது விற்பனை

பொங்கல் பண்டிகையின்போது ரூ.365 கோடிக்கு மது விற்பனை

பொங்கல் பண்டிகையையின் போது டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை சுமார் ரூ.365 கோடி அளவுக்கு செய்யப்பட்டுள்ளது.

 

பொங்கல் பண்டிகையையொட்டி சனவரி 14, 15, 17 ஆகிய திகதிகளில் இந்த விற்பனை நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

டாஸ்மாக் அதிகாரி ஒருவர் இது குறித்து கூறுகையில், பொங்கலின்போது டாஸ்மாக் மது விற்பனைக்காக இலக்கு எதுவும் நிர்ணயிக்கவில்லை.

எனினும், கடந்த ஆண்டைவிட அதிக வருவாய் ஈட்ட வேண்டும் என்று மாவட்ட, மண்டல மேலாளர்கள் டாஸ்மாக் ஊழியர்களை அறிவுறுத்தியிருந்தனர்.

இந்த ஆண்டு போகிப் பண்டிகையான ஜனவரி 14ம் திகதி ரூ.110 கோடி அளவுக்கு மது வகைகள் விற்பனையாகியுள்ளது.

பொங்கல் நாளான 15ம் திகதி ரூ.140 கோடிக்கும், காணும் பொங்கல் நாளான 17ம் திகதி ரூ.115 கோடிக்கும் மது விற்பனை ஆகியுள்ளது.

இந்த 3 தினங்களில் சுமார் ரூ.365 கோடி அளவுக்கு டாஸ்மாக் நிறுவனம் வருவாய் ஈட்டியுள்ளது என தெரிவித்துள்ளார்.