Tue06182013

Last update12:00:00 AM

Font Size

Profile

Menu Style

Cpanel

காணொளி 2

Video 1

Back செய்திகள் செய்திகள் உலகச்செய்திகள் வடகொரியாவுக்கு எதிரான தீர்மானம்: ஐ.நா.வில் நிறைவேறியது

வடகொரியாவுக்கு எதிரான தீர்மானம்: ஐ.நா.வில் நிறைவேறியது

மனித உரிமைகள் தொடர்பான .நா. குழு, வடகொரியாவுக்கு எதிரான தீர்மானத்தை முதன் முறையாக வாக்கெடுப்பின்றி ஒருமனதாக நிறைவேற்றி உள்ளது.

ஆள் கடத்தல் மற்றும் இதர விதிமீறல்கள் தொடர்பான பிரச்னைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என வடகொரியாவை வலியுறுத்தும் வகையில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தத் தீர்மானம், .நா. பொதுச் சபையின் மூன்றாவது குழுவிடம் வருவதற்கு 8 ஆண்டுகள் ஆனது. எனினும், வாக்கெடுப்பு இல்லாமல் தீர்மானம் நிறைவேறியிருப்பது இதுதான் முதன்முறை. எனினும், சீனா, கியூபா மற்றும் வெனிசூலா உள்ளிட்ட சில நாடுகள் இந்தத் தீர்மானத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க

வில்லை.

ஒரு நாட்டின் மனித உரிமை மீறல் தொடர்பான கவலையை எடுத்துரைக்கும் தீர்மானம் .நா.வில் ஒருமனதாக நிறைவேறுவது மிகவும் அரிதான நிகழ்வு. இதுவிஷயத்தில் நட்பு நாடுகளான வடகொரியாவும், சீனாவும் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என கோரவில்லை.