Mon09012014

Last update04:55:26 PM

Font Size

Profile

Menu Style

Cpanel
Back விளையாட்டு விளையாட்டு மற்றயவை பாட்மின்டன்: ஸ்ரீகாந்த் வெற்றி

பாட்மின்டன்: ஸ்ரீகாந்த் வெற்றி

மக்காவ்: மக்காவ் ஓபன் பாட்மின்டன் தொடரின் இரண்டாவது சுற்றில், இந்தியாவின் ஸ்ரீகாந்த் வெற்றி பெற்றார்.

சீனாவில் நடக்கும் இத்தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாம் சுற்றில் ஸ்ரீகாந்த், கொரியாவின் மின் கியை எதிர் கொண்டார். இதன் முதல் செட்டை ஸ்ரீகாந்த் 21-13 என கைப்பற்றினார். இரண்டாவது செட்டில் 21-11 என எளிதில் வென்றார். முடிவில், ஸ்ரீகாந்த் 21-13, 21-11 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, மூன்றாம் செட்டிற்குள் நுழைந்தார்.

மற்றொரு போட்டியில் இந்தியாவின் குருசாய்தத், சீன தைபேயின் போ வெய்யை 21-10, 21-14 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தினார்.

கலப்பு இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் தருண், அஷ்வினி ஜோடி, தாய்லாந்தின் திட்போங், முன்கிட்மார்ன் ஜோடியை 21-18, 21-17 என வென்றது.

ஆண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் பிரனாவ், அக்ஷய் ஜோடி, இந்தோனேஷியாவின் மார்கஸ், அக்ரிபின்னா ஜோடியிடம் 8-21, 16-21 என்ற செட் கணக்கில் தோல்வியுற்றது.

பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அபர்ணா, சிகி ஜோடி, மலேசியாவின் விவியன், வூன் ஜோடியிடம் 11-21, 18-21 என வீழ்ந்தது.