Mon05222017

Last updateMon, 22 May 2017 3am

Back You are here: Home

Articles

முதல் சுற்று போட்டியை தோற்பதற்காக ஜோகோவிச்சிற்கு ரூ. 1.34 கோடி

உலகின்நம்பர்1’ வீரர் செர்பியாவின் ஜோகோவிச் கூறுகையில்,‘‘ கடந்த 2006ல் ரஷ்யாவில் நடந்த தொடரின் போது, வேறொரு நபர் வழியாக

புக்கிகள் என்னை அணுகினர். முதல் சுற்று போட்டியை தோற்பதற்காக ரூ. 1.34 கோடி வரை தர முன்வந்தனர். இது சட்டவிரோதம் என்று கூறி மறுத்துவிட்டேன். நல்லவேளை இவ்விஷயத்தில் நேரடியாக தொடர்பு கொள்ளவில்லை,’’ என்றார்.

டென்னிஸ்பிக்சிங் எப்படி

கிரிக்கெட்டில்நோபால் வீசுவது, அதிக ரன்கள் விட்டுத்தருவது, போட்டியில் தோற்பது என, பல வழிகளில்பிக்சிங் நடக்கும். டென்னிசிலும் இதற்கு பல வழிகள் உள்ளன.

* வேண்டுமேன்றே செட்களை இழந்து தோற்பது.

* காயம் என்று கூறி பாதியில் விலகி விடுவது.

* முதல் செட்டை வென்று விட்டு, பின் அடுத்தடுத்த செட்களை இழந்து தோற்பது.

* எத்தனைகேம்கள் எடுக்க வேண்டும் என, முன்னதாகவே முடிவு செய்துவிட்டு விளையாடுவது. கிரிக்கெட்டில் குறிப்பிட்ட ஓவரில் எத்தனை ரன் தருவது என்பது போல.

1

டென்னிஸ் சூதாட்டத்திற்காக தடை விதிக்கப்பட்டதில் முக்கிய வீரர் ஆஸ்திரியாவின் டேனியல் கொல்லெரர். இவர் 2009ல் 55வது இடத்தில் இருந்தார். 2009–2010ல் ஊழல் தடுப்பு விதிகளை மீறியதற்காக 2011ல் வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து அப்பீல் செய்த பின் விடுவிக்கப்பட்டார்.

16

கடந்த 10 ஆண்டுகளில் தரவரிசையில்டாப்50’ இடத்துக்குள் இருந்த வீரர்களில் 16 பேர், பல்வேறு போட்டிகளில் சந்தேகத்துக்கு இடமான முறையில் தோற்றனர்.

70

டென்னிஸ் சங்கத்திடம் தரப்பட்ட சந்தேகிக்கப்படும் வீரர்கள் பட்டியலில் மொத்தம் 70 பேர் இடம் பெற்றுள்ளனர்.

21,000

டென்னிசில் பதிவு செய்யப்பட்ட, தற்போது விளையாடி வரும் நட்சத்திரங்கள் எண்ணிக்கை மொத்தம் 21,000. தவிர, 2,100 போட்டி நிர்வாகிகள், உள்ளனர். ஆண்டு முழுவதும் 1500க்கும் அதிகமான தொடர்கள் நடக்கின்றன.

26,000

டென்னிஸ் சூதாட்ட அறிக்கைக்காக மொத்தம் 26,000 போட்டிகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு கண்காணிக்கப்பட்டன.