Mon01162017

Last updateMon, 16 Jan 2017 3pm

Back You are here: Home

Articles

சி.ஏ. இறுதித்தேர்வில் முதலிடம் பெற்ற சென்னை மாணவர்!

சி.. படிப்பின் இறுதித்தேர்வில் சென்னை மாணவர் ஒருவர் நாட்டிலேயே முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

 

2015ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த சி.., இறுதித் தேர்வு முடிவுகள் இந்திய சார்ட்டர்டு அக்கவுன்டன்ட் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த தேர்வு முடிவுகளில், சென்னை மாணவர் ஜேம்ஸ் ஜான் பிரிட்டோ, 800க்கு, 595 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவிலான முதலிடத்தை பெற்றுள்ளார்.

திருப்பதி மற்றும் கொல்கத்தாவை சேர்ந்த மாணவர்கள், 572 மற்றும், 566 மதிப்பெண்களுடன் இரண்டாவது மற்றும் மூன்றாமிடம் பெற்றுள்ளனர்.

மேலும், 42,469 பேர் எழுதிய சி.., இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற, 2,440 பேரில், 520 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.