மக்காவு: மக்காவு ஓபன் பாட்மின்டன் தொடரின் முதல் சுற்றில், இந்தியாவின் ஸ்ரீகாந்த் வெற்றி பெற்றார்.
சீனாவில் நடக்கும் மக்காவு ஓபன் பாட்மின்டன் தொடரின், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில், இந்தியாவின் ஸ்ரீகாந்த், இந்தோனேசியாவின் யூனசை சந்தித்தார். இதன் முதல் செட்டை ஸ்ரீகாந்த், 21-10 என கைப்பற்றினார். இரண்டாம் செட்டிலும் அசத்திய ஸ்ரீகாந்த் 21-18 என வென்றார். முடிவில் ஸ்ரீகாந்த் 21-10, 21-18 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் காஷ்யப், அமெரிக்காவின் ஹாக் லாயை எதிர் கொண்டார். இதில் காஷ்யப் 3-4 என பின்தங்கியிருந்த போது, காயம் காரணமாக வெளியேறினார்.
ஆண்கள் இரட்டையர் பிரிவின் தகுதிச் சுற்றில், இந்தியாவின் மானு அட்ரி, சுமித் ஜோடி, சீன தைபேயின் சிங் யாயோ, மின் ஹாயோ ஜோடியிடம் 19-21, 22-20, 9-21 என்ற செட் கணக்கில் தோல்வியுற்றது.



