Sun08282016

Last updateSun, 28 Aug 2016 12am

Back You are here: Home

Articles

டெஸ்ட் ‘ரேங்கிங்’ பட்டியலில் இந்திய அணி மீண்டும் ‘நம்பர்–1’

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இங்கிலாந்து அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதிய மூன்றாவது

போட்டியில் (ஜோகனஸ்பர்க்) தென் ஆப்ரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது. இதன் மூலம், டெஸ்ட் தரவரிசையில் (ரேங்க்) முதலிடத்திலிருந்த தென் ஆப்ரிக்க அணி(107 புள்ளி), மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.            

இந்தியா முதலிடம்: டெஸ்ட் அரங்கில் விராத் கோஹ்லி தலைமையில் எழுச்சி கண்ட இந்திய அணி, கடந்த ஆண்டு இலங்கையை வீழ்த்தியது. பின் தென் ஆப்ரிக்காவை சாய்த்தது. இதன் காரணமாக இரண்டாவது இடத்தில் இருந்து, 5 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும்நம்பர்1’ இடத்தை (110 புள்ளி) பெற்றது. இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலியா (109) உள்ளது.                  

மாற்றம் வருமா: வரும் 22ல் செஞ்சுரியனில் துவங்கும் 4வது டெஸ்டில், தென் ஆப்ரிக்க அணி, இங்கிலாந்தை வீழ்த்தினாலும், தரவரிசையில் முன்னேற்றம் அடைய முடியாது. அதே நேரம், நியூசிலாந்துக்கு எதிராக வரும் பிப்ரவரியில் நடக்கும் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா அசத்தினால், தரவரிசையில் முதலிடத்தை பிடிக்கலாம்.                                    

அஷ்வின் ‘2’     

டெஸ்ட் பவுலர்களுக்கான தரவரிசையில் முதலிடத்தை பறிகொடுத்த இந்தியாவின் அஷ்வின் (871 புள்ளி), 2வது இடத்துக்கு பின்தங்கினார். தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான கேப்டவுன் டெஸ்டில், 8 விக்கெட் வீழ்த்திய இங்கிலாந்தின் பிராட் (880) முதலிடத்தை பிடித்தார். தென் ஆப்ரிக்காவின் ஸ்டைன் (850) மூன்றாவது இடத்தில் உள்ளார்.      

பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில், முதல் 3 இடங்கள் முறையே ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் (899), இங்கிலாந்தின் ஜோ ரூட் (891), நியூசிலாந்தின் வில்லியம்சன் (889) வகிக்கின்றனர்.     

ஆல்ரவுண்டர் பட்டியலில் இந்தியாவின் அஷ்வின் (406) முதலிடத்தில் நீடிக்கிறார்.