Mon05222017

Last updateMon, 22 May 2017 3am

Back You are here: Home

Articles

மும்பை மாரத்தான் ஓட்டத்தில் அசத்திய இந்தியாவின் கேதா ராம்

மும்பை மாரத்தான் ஓட்டத்தில் அசத்திய இந்தியாவின் கேதா ராம், கோபி ஆகியோர் ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றனர்.     

 

மும்பையில், 13வது மாரத்தான் ஓட்டம் நடந்தது. மொத்தம் 42.195 கி.மீ., பந்தய துாரம் கொண்ட இப்போட்டியில் இந்தியாவின் சுதா சிங், நிதேந்திரா சிங் ரவாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.     

இதில் இந்திய ஆண்கள் பிரிவில் பந்தய துாரத்தை 2 மணி நேரம், 15 நிமிடம், 48 வினாடியில் கடந்த நிதேந்திரா சிங் ரவாத் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். தவிர இவர், மும்பை மாரத்தானில் புதிய சாதனை படைத்தார். இதற்கு முன், கடந்த 2012ல் நடந்த இப்போட்டியில் இந்தியாவின் ராம் சிங் யாதவ் பந்தய துாரத்தை 2 மணி நேரம், 16 நிமிடம், 59 வினாடியில் கடந்தது சாதனையாக இருந்தது.     

அடுத்த இரண்டு இடங்களை முறையே கோபி (2 மணி நேரம், 16 நிமிடம், 15 வினாடி), கேதா ராம் (2 மணி நேரம், 17 நிமிடம், 23 வினாடி) ஆகியோர் பிடித்தனர். ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற 2 மணி நேரம், 19 நிமிடம் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதற்கும் குறைவான நேரத்தில் பந்தய துாரத்தை கடந்த இந்தியாவின் கோபி, கேதா ராம் ஆகியோர் ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றனர். நிதேந்திரா சிங் ரவாத், ஏற்கனவே ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டார்.     

சுதா சிங் அபாரம்

 

இந்திய பெண்கள் பிரிவில் முதல் மூன்று இடங்களை முறையே சுதா சிங் (2 மணி நேரம், 39 நிமிடம், 28 வினாடி), லலிதா பாபர் (2 மணி நேரம், 41 நிமிடம், 55 வினாடி), ஜெய்சா (2 மணி நேரம், 43 நிமிடம், 26 வினாடி) ஆகியோர் கைப்பற்றி பதக்கம் வென்றனர். இவர்கள் மூவரும் ஏற்கனவே ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டனர்.