Mon05302016

Last updateMon, 30 May 2016 4am

Back You are here: Home

Articles

டெல்லியில் குடியரசு தின விழா பாதுகாப்பு பற்றி போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை

குடியரசு தின விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டெல்லி போலீஸ் கமிஷனர் பி.எஸ். பஸ்சி தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.

இதில் அரியானா, உத்தரபிரதேசம், ராஜஸ்தான் மற்றும் உத்தரகாண்ட் மாநில போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

குடியரசு தின விழா பாதுகாப்பு நடவடிக்கைக்கு பக்கத்து மாநில போலீஸ் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மிக அவசியம் என்றும், தீவிரவாதிகளின் செயல்பாடுகளை விழிப்புடன் கண்காணித்து நடவடிக்கை எடுப்பது, அதுதொடர்பான தகவல்களை பரிமாற்றம் செய்வதற்கு பரஸ்பர ஒத்துழைப்பு அவசியம் எனவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

குறிப்பாக தற்போதைய பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் ஆள் இல்லா விமானம் மூலம் நடத்தப்படும் தாக்குதல் குறித்து கூட்டத்தில் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது. குடியரசு தின விழாவின்போது ஆளில்லா விமான தாக்குதல் நடைபெறாமல் தடுக்க பக்கத்து மாநிலங்கள் விழிப்புடன் இருந்து கண்காணிக்க வேண்டியதன் அவசியம் பற்றியும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.