Mon08212017

Last updateMon, 21 Aug 2017 1pm

Back You are here: Home

Articles

காதலி மீது கொண்ட மோகம் 3 வயது மகனை கொலை செய்ய துணிந்த தந்தை

அமெரிக்காவில் தந்தை ஒருவர் தமது காதலி மீது கொண்ட மோகம் காரணமாக தனது குழந்தையை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் குடியிருந்து வருபவர் 22 வயதான டேவிட் கிரேட்டோ, இவர் தனது 3 வயது மகனை காணவில்லை என பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

காலையில் எழுந்து தாம் பார்த்த போது வீட்டில் தமது மகன் இல்லை எனவும், வாசல் கதவு பூட்டப்பட்ட நிலையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து மீட்பு குழுவினரும் பொலிசாரும் ஒன்றிணைந்து 3 மணி நேரம் நடந்த தீவிர தேடுதலின் முடிவில் Cooper River Park பகுதியில் இருந்து குழந்தையின் உடலை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் சந்தேகத்தின் அடிப்படையில் டேவிட்டிடம் விசாரித்ததில் அவர் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார்.

தமது இளவயது காதலிக்கு குழந்தைகள் என்றால் பிடிப்பதில்லை என்றும், குழந்தை இருப்பதால் அவர் தம்மை விட்டு பிரிந்து சென்று விட கூடும் என அஞ்சியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து தமது 3 வயது மகனை கழுத்தை நெரித்து கொலை செய்து ஆற்றில் மூழ்கடித்துள்ளதாக டேவிட் தெரிவித்துள்ளார்.

கொலை குற்றத்தை ஒப்புக்கொண்ட அவரை கைது செய்த பொலிசார், அவர் தப்பிவிட கூடும் எனற அச்சத்தினால் பிணை தொகையாக 750,000 டொலர் எனவும் முடிவு செய்தனர்.

இதனிடையே குழந்தை பிராண்டனின் இறுதிச்சடங்கினை நிறைவேற்றும் பொருட்டு பொதுமக்களிடம் இருந்து நிதி வசூலித்துள்ளனர்.