Sat04302016

Last updateSat, 30 Apr 2016 3pm

Back You are here: Home

Articles

ராகுல் காங்கிரஸ் தலைவரானால் பாஜகவுக்குத்தான் நல்லது'

காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்றால், வரும் 2019-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில், கடந்த

மக்களவைத் தேர்தலைவிட அதிக இடங்களில் பாஜக வெற்றி பெறும் என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலர் கைலாஷ் விஜய்வர்கீய தெரிவித்தார்.

 மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற வியாழக்கிழமை வந்த அவரிடம், காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி விரைவில் பொறுப்பேற்க உள்ளதாக கூறப்படுகிறதே? என்று செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.

 அதற்கு, "காங்கிரஸ் துணைத் தலைவராக உள்ள ராகுல் காந்தி, அந்தக் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றால், வரும் 2019-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில், கடந்த மக்களவைத் தேர்தலைவிட (2014) அதிக இடங்களில் பாஜக வெற்றி பெறும்' என்று கைலாஷ் விஜய்வர்கீய பதிலளித்தார்.

 கடந்த மக்களவைத் தேர்தலில், பாஜக 280 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இதற்கு மாறாக, காங்கிரஸ் வெறும் 44 தொகுதிகளில் மட்டுமே வென்றது குறிப்பிடத்தக்கது.