Sun06262016

Last updateMon, 27 Jun 2016 12am

Back You are here: Home Using Joomla! Using Extensions Templates Beez5 Typography Beez5 சினிமா கிசுகிசு/போட்டி காஷ்மோராவுக்கு பிரேக் போட்ட நயன்தாராவின் கால்ஷீட்

Typography Beez5

காஷ்மோராவுக்கு பிரேக் போட்ட நயன்தாராவின் கால்ஷீட்

'மெட்ராஸ்', 'கொம்பன்' என வரிசையாக வெற்றிப் படங்களை தந்த கார்த்தி அடுத்து நடிக்கு படம் 'காஷ்மோரா'. விஜய்சேதுபதியை வைத்து

'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தை இயக்கிய கோகுல் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தில், கார்த்திக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இன்னொரு கதாநாயகியாக, ஸ்ரீதிவ்யா நடிக்கிறார்.

'ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்' நிறுவனம் சார்பில் எஸ்.ஆர். பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இணைந்து காஷ்மோரா படத்தை தயாரிக்கின்றனர். இந்த பட நிறுவனத்தில் கார்த்தியும் ஒரு பங்குதாரர் என்று தகவல். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஏற்கெனவே நடந்து முடிந்தது.

சில வார இடைவெளியில் இரண்டாம்கட்ட படப்பிடிப்பை தொடங்கி படத்தையும் விரைந்து முடிக்க திட்டமிட்டிருந்தனர். படத்தின் நாயகியான நயன்தாரா கால்ஷீட் கொடுக்கவில்லை. சில படங்களுக்கு கால்ஷீட் கொடுத்துவிட்டதாக சொல்லி காஷ்மோரா படத்துக்கு டேட் கொடுக்காமல் இழுத்தடிக்க, வெறுத்துப்போன கார்த்தி, நடிகர் சங்க வேலைகளில் முழுநேரமாகவே இறங்கிவிட்டார்.

நயன்தாரா எப்போது டேட் கொடுக்கிறாரோ.. அப்போதுதான் காஷ்மோரா படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பை தொடங்க முடியும் என்ற இக்கட்டான நிலையில் பட வேலைகள் ஸ்தம்பித்தன. இந்நிலையில் சமீத்தில்தான் காஷ்மோரா படத்துக்கு நயன்தாராவின் கால்ஷீட் கிடைத்திருக்கிறது. இதனை தொடர்ந்து 'காஷ்மோரா'வின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது துவங்கியுள்ளது.