Mon05302016

Last updateMon, 30 May 2016 11am

Back You are here: Home Using Joomla! Using Extensions Templates Beez5 Typography Beez5 சினிமா கிசுகிசு/போட்டி பாலா ஒரு பல்கலைகழகம்: வரலட்சுமி புகழாரம்

Typography Beez5

பாலா ஒரு பல்கலைகழகம்: வரலட்சுமி புகழாரம்

"பாலா படம் ஒன்றில் நடித்துவிட்டால் அதன் பிறகு எத்தகைய படத்திலும் எத்தகைய கேரக்டரிலும் நடித்து விடமுடியும் அந்த அளவிற்கு பயிற்சி

கிடைத்து விடும், அவர் ஒரு பல்லைகழகம்" என்கிறார் வரலட்சுமி. தாரை தப்பட்டை படத்தில் நடித்தது பற்றி வரலட்சுமி மேலும் கூறியதாவது:

திடீரென்று ஒரு நாள் பாலா சாரிடமிருந்து ஒரு போன் வந்தது. உடனே அபீசுக்கு வரச்சொன்னார். போனேன். படம் தாரை தப்பட்டை நீ கரகாட்டக்காரி வேடத்துல நடிக்கிற ஓகேவான்னு கேட்டார். கரும்பு திங்க கூலியான்னு உடனே ஒத்துக்கிட்டேன். ஏற்கெனவே எனக்கு நடனம் தெரியும் என்பதால் கரகாட்டத்தை எளிதாக கத்துக்க முடிந்தது. படப்பிடிப்புக்கு கரகாட்டம் ஆடும் பெண்களை வரவழைத்து அவர்களின் உடல் மொழி, பேச்சு வழக்கை கற்றுக் கொண்டு நடித்தேன்.

படத்தில் என் கேரக்டர் பெயர் சூறாவளி. சசிகுமார் குரூப்ல ஆடுற பொண்ணு. படம் முழுக்க துறுதுறுன்னு வர்ற மாதரியான கேரக்டர். செம குத்தாட்டம் போட்டிருக்கேன். பிருந்தா மாஸ்டர், ராதிகா மாஸ்டர், பாபா மாஸ்டர் மூணு பேரும் சேர்ந்து கசக்கி பிழிஞ்சிட்டாங்க. பாலா சார் சீன் சொல்லும்போதே அந்த கேரக்டராவே மாற வச்சிடுவார். அப்புறம் நாம நடிக்க வேண்டியதே இல்லை. ஒரு முறை கண்ணாடியை உடைக்கிற சீன். கையில் காயம் படுமேன்னு கூட யோசிக்காக உடைச்சேன். கண்ணாடி தோள்ல பட்டு காயமாகிடுச்சு. ஆனாலும் சீன் பிரமாதமாக வந்தது. அந்த இடத்தியே எனக்கு தங்க சங்கிலி போட்டு பாராட்டினார் பாலா சார். அவர் ஒரு பல்கலை கழகம் அவர்கிட்ட படிச்சு பட்டம் வாங்கிட்டா எங்க வேணாலும் வேலை பார்க்கலாம். என்கிறார் வரலட்சுமி.