Sat08272016

Last updateSun, 28 Aug 2016 12am

Back You are here: Home

Articles

ரயில் பயங்கரவாதிகளுடன் மோதிய தனுஷ்

தனுஷ் நடிப்பில் மாரி, தங்கமகன் படங்களின் படப்பிடிப்பு முடிந்தபோதே அந்த படங்களைப் பற்றிய பரபரப்பு செய்திகள் வெளியாகின. ஆனால் அவர்

பிரபுசாலமன் இயக்கத்தில் நடித்துள்ள ரயில் படப்பிடிப்பு முடிந்து விட்டது. அதோடு எடிட்டிங் பணிகள் முடிந்து அடுத்தகட்ட பணிகள் நடக்கும் நிலையில், வருகிற 12-ந்தேதி பேட்ஜ் ஒர்க் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

மேலும், இந்த படத்தின் டைட்டில் ரயில் என்பது யூனிட் நபர்கள் வாயிலாக வெளியான போதும், இன்னமும் அதை பிரபுசாலமன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. அதோடு அப்படம் குறித்த செய்திகளையும் வெளியிடவில்லை. ஆனபோதும், ரயில் படம் குறித்த சில தகவல்கள் கசியத் தொடங்கி விட்டன. முக்கியமாக, அப்படத்தில் ரயிலை பயங்கரவாதிகள் கடத்தி விடும் ஒரு அதிரடியான காட்சி இடம்பெற்றிருப்பது இப்போது நமக்கு கிடைத்துள்ளது.

அதாவது, நடுகாட்டிற்குள் ரயில் சென்று கொண்டிருக்கும்போது ரயிலை வழிமறிக்கும் பயங்கரவாதிகள் ரயிலை வேறு ட்ராக்கில் கடத்துவார்களாம். இதனால் பயணிகள் அனைவரும் அழுது கூச்சலிடுவார்களாம். இந்த சூழ்நிலையில், கேன்டீன் பையனாக நடித்துள்ள தனுஷ், புகுந்து அந்த பயங்கரவாதிகளை விரட்டியடித்து ரயிலையும், பயணிகளையும் காப்பாற்றுவதுதான் அந்த காட்சியாம். படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த காட்சி என்பதால் அந்த ஒரு காட்சியை மட்டுமே 2 வாரத்திற்கு மேலாக படமாக்கினாராம் பிரபுசாலமன்.