Sat07302016

Last updateSat, 30 Jul 2016 3pm

Back You are here: Home Using Joomla! Using Extensions Modules Display Modules Weblinks செய்திகள் பொது/சிறப்பு செய்திகள் ஆசைக்கு இணங்க அழைத்த அதிகாரியை செருப்பால் அடித்த பெண்

ஆசைக்கு இணங்க அழைத்த அதிகாரியை செருப்பால் அடித்த பெண்

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் பல்நாடு கிராமத்தை சேர்ந்த ஒரு பெண் மின்துறை காண்டிராக்டராக உள்ளார். இவரது காண்டிராக்ட் பணிக்கு மின்சார துறையில் இருந்து பணம் வரவேண்டி இருந்தது. 

 

இதற்கான பில் தொகையை அனுமதிக்கும்படி குண்டூர் மின்துறை அலுவலக கூடுதல் செயற்பொறியாளர் ரவிக்குமார் என்பவரை அணுகினார். 

பில் தொகையை அனுமதிக்க அவர் லஞ்சம் கேட்டார். அதற்கு அந்த பெண் காண்டிராக்டர் சம்மதம் தெரிவித்தார். 

‘‘கடன் வாங்கி இந்த காண்டிராக்ட் பணியை செய்து உள்ளேன். கடனுக்கு வட்டி ஏறிக்கொண்டே இருக்கிறது. இதனால் அதிகாரிகள் கேட்ட தொகையை கொடுத்து விடலாம் என்ற எண்ணத்தில் அந்த பெண் இந்த முடிவை எடுத்தார். 

ஆனால் அதிகாரி ரவிக்குமார் லஞ்சத்துடன் விடவில்லை. ‘‘எனது ஆசைக்கு இணங்க வேண்டும். அப்போதுதான் பில் தொகையை அனுமதிப்பேன்’’ என்றார். 

ஆனால் அந்த பெண் அதற்கு சம்மதிக்கவில்லை. ஆனால் அதிகாரி ரவிக்குமார் தொடர்ந்து அந்த பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்தார். செல்போனில் ஆபாசமாக மெசேஜ் அனுப்பி வந்தார். இதனால் பெண் காண்டிராக்டர் பொறுமை இழந்தார். 

மாவட்ட மின்துறை சூப்பிரண்டு அலுவலகத்தில் அதிகாரிகள் கூட்டம் நடப்பதாக தகவல் கிடைத்து அங்கு சென்றார். அங்கு அதிகாரி ரவிக்குமார் இருந்தார். 

அவரது முன் சென்ற பெண் தனது செருப்பை கழற்றி கன்னத்தில் பளார்... பளார்.. என்று அறைந்தார். அனைவர் முன்னிலையிலும் நடந்த இந்த ஆவேச தாக்குதலை கண்ட மற்ற அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த பெண்ணை தடுக்க முயன்றனர். 

உடனே பெண் காண்டிராக்டர் தனது செல்போனை மேஜையில் போட்டு பாருங்கள் இந்த ஆள் அனுப்பிய ஆபாச மெசேஜை. உங்கள் வீட்டு பெண்ணுக்கு அனுப்பினால் நீங்கள் சும்மா விடுவீர்களா? என்று ஆவேசமாக கேட்டார். இதனால் மற்றவர் வாயடைத்து நின்றனர். 

இதன்பின் காண்டிராக்டர் லாலாப்பேட்டை போலீசில் அதிகாரி ரவிக்குமார் மீது புகார் செய்தார். 

இதுபற்றிய தகவல் அறிந்ததும் மின்துறை உயர் அதிகாரிகள் ரவிக்குமார் மீது துறை ரீதியான விசாரணை நடத்த உத்தரவிட்டனர்.