Sat01312015

Last update07:02:55 AM

Font Size

Profile

Menu Style

Cpanel
Back ஜோதிடம் சின்னத்திரை வாரபலன் வாரபலன்கள் 5-11-2012முதல்11-11-2012வரை

வாரபலன்கள் 5-11-2012முதல்11-11-2012வரை

1.மேசம்:-மேசராசி அன்பர்களே இந்தவாரம் உங்களுக்கு கேது நன்மை தரும் கிரகமாகும்.. நவம்பர்5,6,7வெகு காலமாக விட்டுப் போன பழைய உறவினர்களுடன்

தொடர்புகள் ஏற்படும்.காதல் விசயங்களில் எதிர் பார்த்து இருந்த நல்ல செய்திகள் வந்து சேரும் உடல் நிலையில் முதுகு மூலம் போன்ற தொல்லைகள் வந்து போகும்.செய்யாத குற்றங்களுக்காக வீண் பழிச் சொல் வர இருப்பதால் எந்த விசயத்திலும் மிகவும் கவனமுடன் நடந்து கொள்வது நல்லது.நவம்பர்8,9,10அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் மிகவும் எச்சரிக்கையாய் பேசிப் பழகவும். தோல் சம்பந்தமான பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்வோர்கள்,அணு ஆராய்சித்துறையை சார்ந்த விஞ்ஞானிகள்,இரசாயனப் பொருட்களின் வியாபாரிகள்,பழைய இரும்பு கழிவுப் பொருள் வியாபாரிகள்,நாடகத் துறை சார்ந்தவர்கள்,மருத்துவப் பரிசோதனைக் கூடங்களை நடத்துபவர்கள் ஆகியோர்கள் நற் பலன் அடைவீர்

கள்.கேட்ட இடத்தில் பணம் கிடைக்க இன்னும் சற்று கால தாமதம் ஆகலாம்.அரசு வழக்குகளில்வெற்றி கிடைக்க வாய்ப்பு உள்ளது.நவம்பர்11வீடு வாகனங்களை புதுப்பித்
தலுக்காகப் புதிய கடன் வாங்குவதற்கு முயற்சிகளைச் செய்வீர்கள்.மாணவர்கள் கல்வி மற்றும் விளையாட்டுக்களில் கவனமுடன் இருக்கவும்.மஹான்களின் எதிர் பாராத தரிசனங்களால் மன நிம்மதி அடைவீர்கள்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-7
இராசியான நிறம்:-கருஞ்சிகப்பு
இராசியான திசை:-வடமேற்கு
பரிகாரம்:-கணபதி வழிபாடு செய்து வரவும்.

2.ரிசபம்:-ரிசபராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும்.நவம்பர்5,6,7புதிய வீடு மாற்றம் செய்வதற்கான முயற்சிகளில் நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். சுப காரிய சம்பந்தமாக வட திசையில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும் காலமாகும்.ரேஸ் லாட்டரிபோனற விசயங்களின் மூலமாகத் திடீர் தன வரவு உண்டாகலாம். குல தெய்வ ஆலயங்களை திருத்திக் கட்டுவதற்கான முயற்சிகளில் ஈடு பட்டு நற்பெயர் எடுப்பீர்கள்.நவம்பர்8,9,10நறுமணப் பொருட்களின் வியாபாரிகள்,அநாதை ஆசிரமங்களை நடத்துவோர்கள்,இனிப்புப் பொருட்களின் வியாபாரிகள், கம்யுட்டர் தயாரிப்பாளர்கள்,பேராசிரியர்கள்.பொதுப் பணி செய்வோர்கள், பூஜைப் பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்வோர்கள்,ஆலயங்களில் பணி செய்வோர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவீர்கள்.கணவன் மனைவி உறவுகளில் காரணமற்ற சச்சரவுகள் வந்து நீங்கும்.மஹான்களின் எதிர்பாராத தரிசனங்களால் மன நிம்மதி அடைவீர்கள்.வீடு மற்றும் வாகனங்களைப் பழுது பார்ப்பதன் மூலமாகப் புதிய செலவகள் வந்து சேரும்.நவம்பர்11தாயின் உடல் நிலையில் இருந்து வந்த பாதிப்புகள் சற்று குறையும்.நீண்ட காலமாப் பிரச்சனைகளில் இருந்து வந்து பூர்வீகச் சொத்துக்கள் பெரிய மனிதர்களின் தலையிடுதலால் கைக்கு வந்து சேரும்.நீண்ட தூர பயணங்களின் மூலம் எதிர் பார்த்திருந்த காரியங்கள் நிறைவேறுதற்கு வாய்ப்புகள் உள்ளது.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-3
இராசியான நிறம்:-மஞ்சள்
இராசியான திசை:-வடகிழக்கு
பரிகாரம்:-தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்து வரவும்.

3.மிதுனம்:-மிதுனராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும்.நவம்பர்5,6நில புலன்கள் வாங்குவோர் விற்போர்கள்,கட்டிட சம்பந்தமான தொழிற் செய்வோர்கள்,கார் லாரி போன்ற வாகனத் தொழிற் செய்வோர்கள்,கலைத்துறை சார்ந்தவர்கள்,சிற்றுண்டி உணவுப் பொருட்கள் மற்றும் நறுமணப் பொருள் வியாபாரிகள்,ஆடம்பர அலங்காரப் பொருட்களின் வியாபாரிகள்,சினிமா மற்றும் நாடகத்துறை சார்ந்த நடிகர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவீர்கள்.வங்கி உதவிகளின் மூலம் புதிய வாகனங்களை வாங்குவதற்கு முயற்சிகளைச் செய்வீர்கள்.நவம்பர்7,8மற்றவர்களின் விசயங்களில் தலையிட்டு மன நிம்மதி இழக்க வேண்டாம்.பிள்ளைகளால் சிற்சில தொல்லைகள் ஏற்பட்டாலும் அவர்களால் பெயர் புகழ் அடைவீர்கள். குடும்பத்தில் தடை பட்டு வந்த சுப காரிய நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள்.நவம்பர்9,10,11வீடு மற்றும் தொழிற்சாலைகளை இட மாற்றம் செய்வதற்கு வாய்ப்புகள் உள்ளது.. கண் மற்றும் காதுகளில் மிக கவனமுடன் இருப்பது நல்லது.கணவன் மனைவி உறவுகளில் இது நாள் வரையில் இருந்து வந்துள்ள கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமையுடன் காணப்படுவார்கள்.
வேற்றுமதத்தவர்களிடம் இருந்து எதிர் பார்த்திருந்த ஆதாயம் கிடைப்பதற்கு இன்னும் சற்று கால தாமதம் ஆகலாம்.பொது
வாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-6
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை:-தென்கிழக்கு
பரிகாரம்:-மஹாலட்சுமி வழிபாடு செய்து வரவும்.

4.கடகம்:-கடகராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும்..நவம்பர்5,6பழைய இரும்பு,பழமையான இயந்திரங்கள்,இரசாயனம்,தரகு ஏஜன்சி குத்தகை போன்ற தொழிற் செய்வோர்கள்,சாயப் பவுடர் வியாபாரிகள்,மீன் முட்டை மாமிசம் போன்ற உணவுப் பொருட்களின் வியாபாரிகள் ஆகியோர்கள் நற்பலன் அடைவீர்கள்.பங்காளிகளுடன் சேர்ந்து புதிய தொழில் ஆரம்பம் செய்வதற்கான முயற்சிகளில் எதிர் பார்த்த வெற்றி கிடைக்கும்.நவம்பர்7,8,9விளையாட்டுத் துறை சார்ந்தவர்கள் சற்று கவனமுடன் இருப்பது நல்லது.நாட் பட்ட பழைய பிரச்சனைகள் மீண்டும் தலை தூக்குவதன் மூலம் மன நிம்மதிக் குறைவு ஏற்படலாம்.நண்பர்கள் வீட்டுச் சுப காரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நீண்ட தூரப் பயணங்களை மேற் கொள்ளுவீர்கள்.பொருளாதாரத்தில் இருந்து வந்துள்ள நெருக்கடிகள் மாறி சற்று முன்னேற்றமான சூழ்நிலை காணப்படும்.நவம்பர்10,11வெகு காலமாக காணாமற் போன பொருட்கள் மற்றும் நபர்கள் திரும்ப வீடு வந்து சேர வாய்ப்பு உள்ளது..உடல் நிலையில் வயிறு மற்றும் மூல சம்பந்தமான உபாதைகள் வந்து போகும். குடும்பத்தில் இதுவரையில் ஏற்பட்டு வந்துள்ள மருத்துவச் செலவுகள் குறையும். பூர்வீகச் சொத்து சம்பந்தமான வழக்கு விசயங்களில் பெரிய மனிதர்களின் தலையிடுதலால் நல்லதொரு முடிவுக்கு வரும்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-4
இராசியான நிறம்:-கருப்பு
இராசியான திசை:-வடமேற்கு
பரிகாரம்:-பிதுர் மற்றும் அம்மன் வழிபாடு செய்து வரவும்.

5.சிம்மம்:-சிம்மராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும்.நவம்பர்5தாய் உடல் நிலை பாதிப்பால் மருத்துவச் செலவுகள் உண்டாகலாம்.குழந்தைகளின் உடல் நிலையில் மிகவும் கவனமுடன் இருக்கவும்.பொருளாதாரத்தில் நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டாலும் மிக சிரமத்தின் பேரில் சரி செய்வீர்கள். நவம்பர்6,7,8குல தெய்வ ஆலயத் திருப்பணிகளில் பங்கு கொண்டு மன நிறைவடைவீர்கள்.வங்கிகளின் மூலமாக நீண்ட காலமாக எதிர் பார்த்து இருந்த பணம் கிடைக்க இன்னும் சற்று கால தாமதம் ஆகலாம்.யாத்திரையின் போது புதிய நபர்களின் சந்திப்பால் சிற்சில காரியங்களை நிறைவேற்றிக் கொள்ளுவீர்கள். நண்பர்களால் வீண் பிரச்சனைகள் வர இருப்பதால் மிக கவனமுடன் இருக்கவும்.உற்றார் உறவினர்களின் வரவுகளால் நன்மை அடைவீர்கள்.நவம்பர்9,10,11தீராத நோய்கள் தீருவதற்காக நீண்ட தூரப் பயணங்களை மேற் கொள்ளுவீர்கள். கால்களில் கவனம் தேவை. பூ பழம் பூஜைப் பொருட்கள்,கம்யுட்டர் போன்ற பொருட்களை உற்பத்தி விற்பனை செய்வோர்கள்,பொதுப்பணித் துறை சார்ந்தவர்கள்,ஆலயப் பணி செய்வோர்கள்,அநாதை ஆசிரமங்களை நடத்துபவர்கள் நறுமணப் பொருட்களின் வியாபாரிகள்,இனிப்பு சம்பந்தமான சிற்றுண்டி உணவுப் பொருட்களின் வியாபாரிகள் ஆகியோர்கள் நற் பலன் அடைவீர்கள்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-3
இராசியான நிறம்:-மஞ்சள்
இராசியான திசை:-வடகிழக்கு
பரிகாரம்:-சிவ வழிபாடு செய்து வரவும்.

6.கன்னி:-கன்னிராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும்..நவம்பர்5பணப் புழக்கத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் மாறி நல்ல முன்னேற்றம் காணப்படும்.குடும்பத்தில் நடைபெற வேண்டிய சுபகாரிய நிகழ்ச்சிகளுக்காகப் புதிய கடன் வாங்குவீர்கள். தந்தை வழிச் சொந்த பந்தங்களால் எதிர் பாராத சில ஆதாயங்களை அடைவீர்கள்.நவம்பர்6,7,8,9தாயின் உடல் நிலை பாதிப்புக்களால் சிற்சில மருத்துவச் செலவுகள் வந்து சேரும்.குல தெய்வ ஆலய வழிபாடு செய்து வருவதற்கான முயற்சிகளில் ஈடு படுவீர்கள்.பூமி நிலம் சம்பந்தமான தொழில்கள்,தங்கம் வெள்ளி போன்ற நகை வியாபாரிகள்,நெருப்புத் தொழிற் செய்வோர்கள்,காவல்துறை ராணுவம்,தீயணைப்பு போன்ற துறை சார்ந்தவர்கள்,கேஸ் வெல்டிங் சம்பந்தமான தொழிற் செய்வோர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள்.நவம்பர்10,11துலை தூரப் பயணங்
களால் எதிர் பார்த்த காரியம் நிறைவேறும்.அரசியல் வாதிகளிடம் இருந்து எதிர் பார்த்து இருந்த நல்ல தகவல்கள் வந்து சேரும்.புதிய நண்பர்களிடம் சற்று ஏச்சரிக்கையுடன் பேசிப் பழகுதல் நல்லது.யாத்திரையின் போது மிகுந்த கவனமுடன் பயணம் செய்வதால் விபத்துக்களைத் தடுக்கலாம்.நீண்ட காலமாக வராத கடன் கொடுத்து இருந்த பணம் மற்றும் பொருட்கள் ஆகியன திரும்பக் கை வந்து சேரும்.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-9
இராசியான நிறம்:-சிகப்பு
இராசியான திசை:-தெற்கு
பரிகாரம்:-முருகன் வழிபாடு செய்து வரவும்.

7.துலாம்:-துலாம் ராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும்..நவம்பர்5,6மின்சாரம் நெருப்பு சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள்,காவல் துறை சார்ந்தவர்கள்,தீயணைப்பு நிலையத்தவர்கள்,விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவர்கள்,ஹோட்டல் தொழிற் செய்வோர்கள்,கேஸ் மற்றும் வெல்டிங் சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள் ஆகியோர்கள் நற்பலன் அடைவீர்கள். பழைய நண்பர்களின் சந்திப்பால் ஒரு சிலருக்கு ஆதாயம் உண்டாகும். பிள்ளைகளுக்கு மருத்துவச் செலவுகள் உண்டாகும்.நவம்பர்7,8,9தந்தை மகன் உறவுகளில் இது வரையில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து ஒற்றுமையாய் இருப்பார்கள். சகோதர சகோதரிகளின் சுப காரிய நிகழ்ச்சிகளுக்காகப் புதிய கடன்கள் வாங்குவதற்கு முயற்சிப்பீர்கள்உடம்பில் நரம்பு மற்றும் எலும்பு சம்பந்தமான உபாதைக்ள வந்து போகும்.தீர்த்த யாத்திரை செய்து வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.நவம்பர்10,11அண்டை அயலார்களுடன் கவனமாகப் பேசிப் பழகவும். காணாமற் போன பொருட்கள் காவல் துறையினர்களின் உதவியால் திரும்பக் கிடைக்கும்.வெளி நாடு சென்று வருவதற்கான முயற்சிகளில் சம்பந்தம் இல்லாத நபர்களின் உதவிகள் கிடைக்கும்.அரசியல் வாதிகளுக்கு நல்ல ஆதாயம் பெறக் கூடிய காலமாகும்.யாத்திரையின் போது மிக கவனமுடன் பயணம் செய்து வருவது நல்லது. பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-9
இராசியான நிறம்:-சிகப்ப
இராசியான திசை:-தெற்கு
பரிகாரம்:-துர்க்கை வழிபாடு செய்து வரவும்.

8.விருச்சிகம்:-விருச்சிகராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும்.நவம்பர்5,6வேண்டாத விசங்களில் தலையிட்டு வீண் வம்புகளை விலைக்கு வாங்காதீர்கள்.வெளி நாடு செல்லுதல் போன்ற விசயங்களில் வேற்று மதத்தவரால் ஆதாயம் அடைவீர்கள்.இரும்பு இயந்திரம் இரசாயனம் போன்ற தொழில் செய்வோர்கள்,ஆலை அதிபர்கள்,எண்ணை வியாபாரிகள்,பலசரக்கு கடை நடத்துவோர்கள்,பழைய பொருட்களை விற்பனை செய்வோர்கள்,இன்சினியரிங்துறை சார்ந்தவர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவீர்கள்.நவம்பர்7,8,9தந்தை மகன் உறவுகளில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து ஒற்றுமையுடன் இருப்பார்கள்.குழந்தைகளின் மன மகிழ்ச்சிக்காக உல்லாசப் பயணங்களை மேற் கொள்ளுவீர்கள்.வெகு நாட்களாக வராத கடன் கொடுத்துள்ள பணம் திரும்பக் கிடைக்கும்.பங்காளியுடன் சேர்ந்த புதிய கூட்டுத் தொழிற் செய்வதற்கான மயற்சிகளைச் சற்று தள்ளிப் போடுதல் நல்லது.நவம்பர்10,11 வாகனங்கள் மற்றும் மின்சார பணிகளில் ஈடுபடுவோர்கள் மிக கவனமுடன் இருக்கவும். உல்லாசப் பயணங்கள் செய்வோர்கள் குழந்தைகளை எச்சரிக்கையுடன் பார்த்துக் கொள்வது நல்லதாகும். பழைய கடன்களை அடைத்து விட்டுப் புதிய கடன் வாங்குவீர்கள். பொருளாதாரத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் சற்று குறைந்து காணப்படும். சமுதாய வழர்ச்சிக்கான விசயங்களில் ஈடு படும் போது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-8
இராசியான நிறம்:-நீலம்
இராசியான திசை:-தென்மேற்கு
பரிகாரம்:-சனீஸ்வர வழிபாடு செய்து வரவும்.

9.தனுசு:-தனுசுராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும்.நவம்பர்5,6கலைத்துறை சார்ந்த நடிகர் நடிகைகள், கலைக் கல்லூரியைச் சார்ந்த பேராசிரியர்கள் மற்றும் இவற்றில் கல்வி பயிலும் மாணவர்கள், கட்டிட சம்பந்தமான கல் மணல் சிமிண்ட் செங்கல் போன்ற வியாபாரிகள் ஆகியோர்கள் நற் பலன் அடைவீர்கள்.மாணவர்களுக்கு கல்வியில் எதிர் பாராத சில தடைகள் வந்து போக வாய்ப்பு உள்ளதால் மிக எச்சரிக்கையுடன் பயின்று வருதல் நல்லது. பூர்வீகச் சொத்துக்களில் நீண்ட காலமாக இருந்து வந்துள்ள பிரச்சனைகள் தீர்ந்து சொத்துக்கள் கை வந்து சேரும் காலமாகும்.நவம்பர்7,8,9புதிய வீடு மற்றும் வாகனங்களை வாங்குவதற்
கான முயற்சிகளில் சிலபின்னடைவுகள் வந்து சேரும்.உடம்பில் வாயு மற்றும் வயிறு சம்பந்தமான உபாதைகள் வந்து போகலாம்.குடும்பத்தில் தடைபட்டு வந்த சுப காரிய நிகழ்ச்சிகள் நடைபெற இன்னும் சற்று கால தாமதம் ஆகலாம்.வேலை இல்லாத படித்த இளைஞர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகள் வந்து சேரும் காலமாகும்.நவம்பர்10,11 உற்றார் உறவினர்களின் எதிர் பாராத வரவுகளால் பொருட் செலவுகள் ஏற்பட்டாலும் அவர்களால் சில ஆதாயங்களை அடைவீர்கள்.நீண்ட காலமாக வராமல் இருந்த பணம் மற்றும் பொருட்கள் மிகுந்த சிரமத்தின் பேரில் வந்து சேரும் காலமாகும்.வேண்டாத விசயங்களில் தலையிட்டு வீண் பிரச்சனைகளை விலைக்கு வாங்காதீர்கள்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-6
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை:-தென்கிழக்கு
பரிகாரம்:-மஹாலட்சுமி வழிபாடு செய்து வரவும்.

10.மகரம்:-மகரராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சூரியன் நன்மை தரும் கிரகமாகும்.நவம்பர்5,6திருமணம் போன்ற சுப காரிய சம்பந்தமான முயற்சிகளில் சில தடைகள் வந்து சேரும்.அரசு வழக்கு விசயங்களில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கலாம். நண்பர்களால் வீண் பொருட் செலவுகளும் மன நிம்மதி இன்மையும் ஏற்படலாம்.கணவன் மனைவி உறவுகள் சுமாராகக் காணப்படும்.நெருப்பு,ஹோட்டல்,
மின்சாரம் போன்ற துறை சார்ந்தவர்கள்,அரசுத்துறை சார்ந்த உயர் பதவி வகிப்பவர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள்.நவம்பர்7,8,9தீராத நாட் பட்ட நோய்கள் தீர்வதற்காகப் புதிய மருத்துவர்களின் உதவிகள் கிடைக்கும்.விட்டுப போன பழைய உறவுகள் மீண்டும் துலங்கும்.உற்றார் உறவினர்களின் எதிர் பாராத திடீர் வரவுகளால் பொருட் செலவுகள் வந்து சேரும்.வேலை இல்லாதவர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகள் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.ரேஸ் லாட்டரி போன்ற விசயங்களில் ஈடுபடுவோர்கள் மிக கவனமுடன் இருப்பது நல்லது.நவம்பர்10,11சேர் மார்க்கெட்டில் ஈடு படுவோர்கள் சற்று கவனமுடன் இருக்கவும். மற்றவர்களிடம் இருந்த எதிர்பாரத்த உதவிகள் கடைக்க கூடிய காலமாகும்.பெண் சம்பந்தமான காதல் விசயங்களில் மிகுந்த கவனமுடன் இருப்பது நல்லது. மற்றவர்களை நம்பிப் புதிய கடன்களைக் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-1
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை:-கிழக்கு
பரிகாரம்:-சிவ வழிபாடு செய்து வரவும்.

11.கும்பம்:-கும்பராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும்.நவம்பர்5,6அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் மிகு கவனதாகப் பேசிப் பழகுதல் நல்லது. பொருதாரத்தில் இது வரையில் இருந்த நெருக்கடிகள் மாறி முன்னேற்றமான சூழ்நிலை காணப்படும். ரேஸ் லாட்டரி போன்ற சூதாட்டம் சம்பந்தமான விசயங்களில் பணம் மற்றும் பொருட்களை ஏமாறாமல் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உத்தியோகம் பாரப்பவர்களுக்கு உத்தியோக உயர்வுடன் கூடிய பணி மாற்றங்கள் ஏற்பட
லாம்.நவம்பர்7,8,9வெகு காலமாகப் பிரிந்து போன கணவன் மனைவி இருவரும் ஒன்று சேரும் காலமாகும். புதிய கடன் வாங்கிப் பழைய கடன்களை அடைப்பீர்கள்.கணிதம் எழுத்துத் துறை சார்ந்தவர்கள்,அச்சுத் தொழிற் செய்வோர்கள்,வழக்கறிஞர்கள்,கவிஞர்
கள்,பாடலாசிரியர்கள்,தபால் தந்தித் துறை சார்ந்தவர்கள்,புகைப்பட கலைஞர்கள்,வங்கிப் பணியாளர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவீர்கள்.விவசாயம் செய்பவர்களுக்குப் புதிய முறை விவசாயங்களின் மூலமாக நல்ல விளைச்சல் காணப்படும்.நவம்பர்10,11தீராத நாட் பட்ட நோய்கள் தீர்வதற்காகப் புதிய பெண் மருத்துவர்களின் உதவிகளை நாடுவதன் மூலம் நற்பலன் அடைவீர்கள். புதிய வீடு நிலங்களை வாங்குவதற்காக வங்கிகளில் இருந்து நீண்ட காலமாக எதிர் பார்த்து இருந்த பணம் கைக்கு வந்து சேரும்.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-5
இராசியான நிறம்:-பச்சை
இராசியான திசை:-வடக்கு
பரிகாரம்:-மஹாவிஷ்ணு வழிபாடு செய்து வரவும்.

12.மீனம்:-மீனராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சந்திரன் நன்மை கிகமாகும். நவம்பர்5,6காதல் விசயங்களில் நண்பர்களின் உதவியால் நல்ல செய்திகளைப் பெறுவீர்கள்.மாணவர்கள் கல்வியில் சில தடைகள் வர இருப்பதால் கவனமுடன் சென்று வரவும். நீண்ட காலமாக எதிர் பார்த்து இருந்த புதிய தொழில்களை ஆரம்பம் செய்வதற்காகப் போட்ட திட்டங்களில் வெற்றி பெறுவீர்கள் வெளி நாடு சென்று வருதல் போன்ற புதிய முயற்சிகளில் வேற்று மதத்தவரால் ஆதாயம் உண்டாகும்.நவம்பர்7,8,9வீடு வாகனங்களைப் பழுது பார்ப்பதன் மூலமாகப் புதிய பொருட் செலவுகள் வந்து சேரலாம்.தண்ணீர் கூல்டிரிங்ஸ்,திரவ சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள்,கடல் வளத்துறை சார்ந்தவர்கள்,கப்பல் பணி செய்வோர்கள்,உப்பு உர வியாபாரிகள்,பூஜைப் பொருட்களின் வியாபாரிகள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள்.வராத கடன் கொடுத்து இருந்த பணம் மற்றும் பொருட்கள் காவல் துiறியினர்களின் உதவியால் திரும்பக் கிடைக்கும்.கண் காதுகளில் சிற்சில உபாதைகள் வந்து போகலாம்.நவம்பர்10,11நீண்ட காலமாக தடைபட்டு வந்துள்ள குல தெய்வ ஆலய வழிபாடுகளைச் செய்து வர வாய்ப்பு உள்ள காலமாகும். யாத்திரையின் போது சம்பந்தம் இல்லாத புதிய பெரிய மனிதர்களின் தொடர்புகள் ஏற்பட்டு அவர்களால் ஏதிர் பாராத சில ஆதாயங்களை அடைவீர்கள்.விளையாட்டுத் துறை சார்ந்தவர்களுக்குப் பரிசு மற்றும் பாராட்டுக்களைப் பெறுவார்கள்.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-2
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை:-மேற்கு

பரிகாரம்:-அம்மன் வழிபாடு செய்து வரவும். தொடரும்!