Thu05262016

Last updateThu, 26 May 2016 4pm

Back You are here: Home

Articles

ஆர்யாவுக்கு ரஜினி படத்தில் நடிக்க ஆசை!

நான் கடவுள் படத்திற்கு பிறகு கவனிக்கப்படும் நடிகரானவர் ஆர்யா. ஆனபோதும் அதன்பிறகும் அவர் ப்ளேபாய் கதைகளிலேயே அதிகமாக நடித்து

வந்தார். அந்த வகையில், பாஸ் என்ற பாஸ்கரன், மதராசப்பட்டினம், ராஜா ராணி என ஹிட் படங்களாக கொடுத்து வந்த அவருக்கு, அதன்பிறகு நடித்த இரண்டாம் உலகம், மீகாமன், புறம்போக்கு, வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க, யட்சன், இஞ்சி இடுப்பழகி என பல படங்கள் தொடர் தோல்விகளாக அமைந்தன.

இதனால் ஆர்யாவின் மார்க்கெட் சரிவை சந்தித்துள்ளது. இந்த நிலையில், பெங்களூர் டேய்ஸ் மலையாள ரீமேக்கில் தற்போது நடித்து வருபவர், அடுத்தபடியாக மகிழ்திருமேனி, மஞ்சப்பை ராகவன் இயக்கும் படங்களில் கமிட்டாகியிருக்கிறார். மேலும், சமீபகாலமாக ரஜினி படங்களின் டைட்டீல்களில் இளவட்ட நடிகர்கள் நடிப்பதில் ஆர்வம் காட்டிவரும் நிலையில், ரஜினி நடித்த ஒரு படத்தை ரீமேக் செய்து நடிக்க முடிவு செய்திருக்கிறாராம் ஆர்யா.

 

ஏற்கனவே ரஜினி நடித்த மாப்பிள்ளை, முரட்டுக்காளை ஆகிய படங்கள் ரீமேக் செய்யப்பட்ட நிலையில், எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ரஜினி நடித்த பாண்டியன் படத்தின் ரீமேக்கில் நடிக்கப்போகிறாராம் ஆர்யா. இந்த படத்தை ஜெயம்ரவி நடித்த சகலகலா வல்லவன் அப்பாடக்கர் படத்தை இயக்கிய சுராஜ் இயக்கயிருப்பதாக கோலிவுட்டில் செய்திகள் பரவியுள்ளது.