Mon01162017

Last updateMon, 16 Jan 2017 3pm

Back You are here: Home

Articles

ஒரே நேரத்தில் 3 படங்களில் நடிக்கும் சாந்தினி!

கே.பாக்யராஜ் தனது மகன் சாந்தனுவை நாயகனாக வைத்து இயக்கிய சித்து ப்ளஸ்-2 படத்தில் நடித்தவர் சாந்தினி. முதல் படத்திலேயே மோதிரக்கையினால் குட்டு பட்டதால் அந்த படம் தனக்கு பெரிய என்ட்ரியாக அமையும் என்று எதிர்பார்த்தார் சாந்தினி.

ஆனால், படம் அதிர்ச்சி தோல்வியை கொடுத்ததால் அடுத்தடுத்து அவருக்கு படவாய்ப்புகள் இல்லை. இருப்பினும் தொடர்ந்து முயற்சி எடுத்து வந்த சாந்தினி, நகுல் நடித்த நான் ராஜாவாகப்போகிறேன் என்ற படத்தில் அதன்பிறகு நடித்தார். அதையடுத்து சில தெலுங்கு படங்களில் நடிக்க சென்று விட்டார். 

இப்போது நையப்புடை, வில் அம்பு, என்னோடு விளையாடு ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் நையப்புடையில் பா.விஜய், என்னோடு விளையாடு படத்தில் பரத், வில் அம்புவில் ஹாரிஸ் கல்யாண் ஆகியோருக்கு ஜோடியாக நடித்து வரும் சாந்தினி, இந்த படங்களில் தனக்கு வழக்கமான நாயகியாக இல்லாமல் பர்பாமென்ஸ் பண்ணக்கூடிய வேடங்கள் கிடைத்திருப்பதாக சொல்கிறார். அதோடு, இதற்கு முன்பு நடித்த படங்களில் கிடைத்த நடிப்பு அனுபவத்தைக் கொண்டு இந்த படங்களில் சிறப்பாக நடித்திருக்கிறேன். அதோடு, எனது உடம்பையும் ஸ்லிம் பண்ணி நடித்துள்ளேன். இதற்கெல்லாம் மேலாக, ஆரம்பத்தில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று கூறி வந்த நான், இப்போது கதாபாத்திரங்களுக்கேற்ப என்னை மாற்றிக்கொண்டு நடிக்கிறேன். தொடர்ந்து கவர்ச்சியில் எல்லை தாண்டாமல் நடிப்பேன் என்கிறார்.