பாரதிராஜாவின், "அன்னக் கொடியும், கொடி வீரனும் படத்தில், அன்னக்கொடி கதாபாத்திரத்தில், ஆடு மேய்க்கும் பெண்ணாக நடிக்கிறார் கார்த்திகா. மும்பையில் பிறந்து வளர்ந்த அவர், "ஆடு
மேய்க்கும் கிராமத்து பெண் வேடத்தில் நடிக்க வேண்டும் என, டைரக்டர் சொன்னதும், முதலில் அதிர்ச்சியானார். ஆனால், போகப் போக பழகிக் கொண்டார். அதோடு, "கதைப்படி, ஆடுகளை நான் ரொம்பவே நேசித்தேன். ஆனால், சில ஆடுகள், நிஜமாவே என்னை நேசித்தன. நான் எங்கு சென்றாலும், என் கூடவே வந்தன. நான் உட்கார்ந்தால், என் அருகிலேயே படுத்துக் கொண்டன. அந்த வாயில்லா ஜீவன்கள், என் மேல் வைத்த அன்பை, என் வாழ்நாள் முழுக்க மறக்க முடியாது, என்கிறார் கார்த்திகா.


