Wed06192013

Last update12:00:00 AM

Font Size

Profile

Menu Style

Cpanel

காணொளி 2

Video 1

Back செய்திகள் செய்திகள் கனடா பேச்சுவார்த்தை மேசைக்கு திரும்புமாறு TNAக்கு இந்தியா அழுத்தம்

பேச்சுவார்த்தை மேசைக்கு திரும்புமாறு TNAக்கு இந்தியா அழுத்தம்

தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுத் திட்டம் காண்பது தொடர்பில் பேச்சுவார்த்தை மேசைக்கு திரும்புமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு

இந்தியா அழுத்தம் கொடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

காத்திரமான அரசியல் தீர்வுத் திட்டமொன்றை நோக்கி அரசாங்கத்தையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் நகர்த்தும் முனைப்புக்களில் இந்திய மத்திய அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இந்திய விஜயத்தின் போதும் அரசியல் தீர்வுது; திட்டம் தொடர்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, தமிழகத்தில் இடம்பெற்ற ஒரு சில சம்பவங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் விரிசலை ஏற்படுத்தாது என பிரதமர் மன்மோகன் சிங், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்வது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.