Thu05232013

Last update03:54:06 AM

Font Size

Profile

Menu Style

Cpanel

காணொளி 2

Video 1

Back செய்திகள் செய்திகள் உலகச்செய்திகள் செங்காகு தீவை வாங்கினால் இருநாட்டு வர்த்தகம் பாதிக்கும் ஜப்பானுக்கு சீனா எச்சரிக்கை

செங்காகு தீவை வாங்கினால் இருநாட்டு வர்த்தகம் பாதிக்கும் ஜப்பானுக்கு சீனா எச்சரிக்கை

சர்ச்சைக்குரிய செங்காகு தீவை ஜப்பான் விலைக்கு வாங்கினால், இருநாட்டு வர்த்தகம் கடுமையாக பாதிக்கும்

என்று ஜப்பானுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜப்பானியர்கள் சென்காகு என்றும், சீனர்கள் டயாயு என்றும் அழைக்கும் கிழக்கு சீன கடலில் உள்ள தீவை தமக்குதான் சொந்தம் என இரு நாடுகளும் உரிமை கொண்டாடி வருகின்றன. இந்த விவகாரத்தால், சீனாவில் ஜப்பானுக்கு எதிராக மக்கள் கடந்த 10 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், இருநாடுகளுக்கு இடையே உறவு பாதிக்கத் தொடங்கியுள்ளது.

 

சீனா,ஜப்பான் இடையில் ஆண்டுக்கு 34,500 கோடி டாலர் அளவுக்கு வர்த்தம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சீனாவில் உள்ள பானசோனிக் நிறுவனத்தின் இரு ஆலைகள் மீது மக்கள் திடீர் தாக்குதல் நடத்தி, சூறையாடினர். அதே போல், கேனான் நிறுவனத்தின் 3 ஆலைகளும் தாக்குதலுக்கு உள்ளாகின. சீனாவில் பெரிய தொழிற்சாலையைக் கொண்டுள்ள டொயோட்டா கார் உற்பத்தி நிறுவனமும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் கார்கள் பல இடங்களில் அடித்து நொறுக்கப்பட்டன.

இந்நிலையில், சீனாவின் வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் சென் டான்யாங் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு: சர்ச்சைக்குரிய டயாயு தீவை ஜப்பான் அரசு விலைக்கு வாங்கினால், அது கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும். அது சீனாவின் இறையாண்மைக்கு எதிரானது மட்டுமின்றி சீன மக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக அமையும். இதனால், இருநாட்டு வர்த்தகம் முழுமையாக பாதிக்கும். அதற்கு ஜப்பானே பொறுப்பேற்க வேண்டியிருக்கும். இவ்வாறு சென் டான்யாங் கூறினார்.

 

Entertainment