ராசி குணங்கள் மேஷம்
இன்று மனதில் பட்டதை பளிச்சென்று பேசி அனைவரையும் ஆச்சர்யப் படுத்துவீர்கள்.
கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். ஆடம்பரச்செலவுகளை குறைப்பீர்கள். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் மகிழ்ச்சி தங்கும். பழைய சரக்குகளை புது யுக்தியால் விற்றுத்தீர்ப்பீர்கள். வெளிவட்டாரத்தொடர்பு அதிகரிக்கும். வாகனத்தை சீர்செய்வீர்கள். அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : ப்ரவுன், கிளிப்பச்சை
ராசி குணங்கள் ரிஷபம்
குடும்பத்தினருடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். பிள்ளைகளின் உடல் நிலை சீராக இருக்கும். காசுபணம் தேவையான அளவு இருக்கும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவிர்கள். குலதெய்வப் பிராத்தனை களை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லைகள் விலகும். அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறங்கள் : ப்ரவுன், கிளிப்பச்சை
ராசி குணங்கள் மிதுனம்
அடிமனதில் இருந்த பயம் விலகும். துணிச்சலுடன் சில முடிவுகளை எடுப்பீர்கள். அலைச்சல் தந்த வேலைகளை உடனே முடிப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அனுசரித்து போவீர்கள். பணவரவு திருப்தி தரும். உடல் நிலை சீராகும். வெளிவட்டாரம் மகிழ்ச்சி தரும். ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள். வாகனப்பழுது நீங்கும். அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறங்கள் : சில்வர் கிரே, ஊதா
ராசி குணங்கள் கடகம்
இன்று உங்களின் குறிக்கோளை எட்டிப்பிடிக்க முயற்சிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளின் அடிமனதில் என்ன இருக்கிறது என்பதை தெரிந்துக்கொள்வீர்கள். அரசியல்வாதிகளின் சந்திப்பு கிட்டும். விருந்தினர்களின் வருகையால் வீட்டில் சந்தோஷம் கிட்டும். வேற்று மதத்தினரால் உதவி கிடைக்கும். விரும்பியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறங்கள் : மஞ்சள், வெளீர்நீலம்
ராசி குணங்கள் சிம்மம்
அதிரடி திட்டங்களை தீட்டுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்களை தேடிவந்து சிலர் உதவி கேட்பார்கள். வியாபாரத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் ஆசைகளை பூர்த்தி செய்வீர்கள். ஆன்மீகவாதிகளின் சந்திப்பு நிகழும். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறங்கள் : மிண்ட்கிரே, வைலெட்
ராசி குணங்கள் கன்னி
ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் செலவுகளைக் குறைக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும். யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும் சொந்த விஷயங்களை பகிர்ந்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களால் பிரச்னைகள் வரக்கூடும். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறங்கள் : க்ரீம் வெள்ளை, நீலம்
ராசி குணங்கள் துலாம்
கணவன்-மனைவிக்குள் வீண் விவாதங்கள் வந்துப் போகும். அநாவசியச் செலவுகளை தவிர்க்கப்பாருங்கள். வாகன விபத்துகள் ஏற்படக்கூடும். சகோதர வகையில் சங்கடங்கள் வரும். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வரக்கூடும். அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, கிரே
ராசி குணங்கள் விருச்சிகம்
முகப்பொலிவு கூடும். அதிகாரப்பூர்வமாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர்கள். சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். ஆடம்பரச் செலவுகளை தவிர்ப்பீர்கள். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறங்கள் : ரோஸ், கிளிப்பச்சை
ராசி குணங்கள் தனுசு
இன்று பளிச்சென்று பேசி எல்லோரையும் கவருவீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வருங்காலத்திற்கான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் சகஊழியர்களின் அதரவு கிட்டும். பிரபலங்களின் சந்திப்பு நிகழும். அரசுக் காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும். தாய்வழி உறவினர்களால் இருந்துவந்த மனக்கசப்புகள் விலகும். அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறங்கள் : கிரே, மெரூண்
ராசி குணங்கள் மகரம்
இன்று தைரியமான முடிவுகளை எடுத்து வெற்றி காண்பீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். சகோதரவகையில் மகிழ்ச்சி தங்கும். அம்மாவின் உடல் நிலை சீராகும். உறவினர்கள், நண்பர்களின் சந்திப்பு நிகழும். அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறங்கள் : வெளிர் மஞ்சள், ப்ரவுன்
ராசி குணங்கள் கும்பம்
சந்திராஷ்டமம் நீடிப்பதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்து நீங்கும். உறவினர், நண்பர்கள் சிலர் நன்றி மறந்துப் பேசுவார்கள். பழைய பிரச்னைகள் தலைத்தூக்கும். மற்றவர்களைப் பற்றி வீண் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : மிண்ட்கிரே, சிவப்பு
ராசி குணங்கள் மீனம்
இன்று மனக்குழப்பங்கள் விலகும். வெளியூரிலிருந்து உறவினர்கள், நண்பர்களின் வருகையுண்டு. குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். கன்னிப்பெண்களுக்கு உடல்நிலை சீராகும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிடைக்கும். புண்ணியத் தலங்கள் சென்று வருவீர்கள். அரசாங்க வேலைகள் சுமுகமாக முடியும். அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறங்கள் : வைலெட், வெளிர் நீலம்


