Wed06192013

Last update12:00:00 AM

Font Size

Profile

Menu Style

Cpanel

காணொளி 2

Video 1

Back தொழில்நுட்பம் தொழில்நுட்பம் கணிணி இனி சீடி, டிவிடிக்களை தயாரிக்க போவதில்லை: சோனி நிறுவனம் திடீர் முடிவு

இனி சீடி, டிவிடிக்களை தயாரிக்க போவதில்லை: சோனி நிறுவனம் திடீர் முடிவு

 

வயர்லெஸ் நெட்புக், டேப்ளட் பிசிக்கள் பெருகி வருவதால் சீடி, டிவிடி மற்றும் ப்ளூரே ட்ரைவ் தயாரிப்பினை அடுத்த ஆண்டு தொடக்கம் முதல் நிறுத்தி விட ஜப்பான் சோனி நிறுவனம்

முடிவெடுத்துள்ளது.

 

இவற்றிற்கு பதிலாக ஸ்மார்ட் போன், டேப்ளட் மற்றும் நெட்புக் கணனிகளைத் தயாரிக்கும் பணியில் சோனி ஈடுபடும். இந்த தொழிற்சாலைகளில் பணியாற்றும் 420 தொழிலாளர்கள், வேறு பிரிவிற்கு மாற்றப்படுவார்கள்.

சோனி ஆப்டியார்க் என்ற தனிப் பிரிவு நிறுவனம் மூலம் சோனி இவற்றை இதுவரை தயாரித்து விற்பனை செய்து வந்தது.

அண்மைக் காலங்களில் ட்ரைவ் எதுவும் இல்லாத ஸ்மார்ட் போன்கள் மற்றும் டேப்ளட்கள் அதிகம் புழக்கத்தில் இருப்பதால், சீடி, டிவிடி மற்றும் இவற்றிற்கான ட்ரைவ்கள் விற்பனை தொடர்ந்து குறைந்து வந்தது.

மேலும் சிறிய நிறுவனங்கள் கூட இந்த ட்ரைவ்களைத் தயாரித்து விற்பனை செய்திடலாம் என்ற நிலை வந்ததனால் சோனி இந்த முடிவினை எடுத்துள்ளது.

டிவிடி மற்றும் ஹை டெபனிஷன் டிவிடிக்களுக்குப் போட்டியாக, சோனி நிறுவனம் ப்ளூ ரே பார்மட் தொழில் நுட்பத்தினைக் கொண்டு வந்து வெற்றி பெற்றது.

கடந்த 2006ஆம் ஆண்டில் அழித்து எழுதக் கூடிய ப்ளூரே ட்ரைவினைக் கொண்டு வந்த போது, சோனியுடன் போட்டி போட எந்த நிறுவனமும் இல்லாத நிலை இருந்தது.

ஆனால் ப்ளூ ரே ட்ரைவ் மக்களால் அவ்வளவாக விரும்பப்படாத நிலை ஏற்பட்டதாலும், டிவிடி ட்ரைவ் விலை 50 டொலருக்கும் குறைவாக இறங்கியதாலும், சோனி இந்தப் பிரிவில் இருந்து முற்றிலுமாக தன்னை விலக்கிக் கொள்ளும் முடிவை எடுத்துள்ளது.

ஆனாலும் ஓடியோ சாதனங்களுக்கான ஆப்டிகல் ட்ரைவினைத் தொடர்ந்து சோனி தயாரிக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.