Tue05212013

Last update04:18:17 AM

Font Size

Profile

Menu Style

Cpanel

காணொளி 2

Video 1

Back விளையாட்டு விளையாட்டு மற்றயவை பூபதி - போபண்ணாவுக்கு இரண்டு ஆண்டு தடை

பூபதி - போபண்ணாவுக்கு இரண்டு ஆண்டு தடை

சண்டிகர்: லண்டன் ஒலிம்பிக்கில் சகவீரர் லியாண்டர் பயசுடன் இணைந்து விளையாட மறுத்த இந்தியாவின் மகேஷ் பூபதி, ரோகன் போபண்ணா ஆகியோருக்கு இரண்டு ஆண்டுகள் தடை

விதிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் முடிந்த லண்டன் ஒலிம்பிக் டென்னிஸ் இரட்டையர் பிரிவு போட்டிக்கான அணித் தேர்வின் போது, பயசுடன் இணைந்து விளையாட மாட்டோம் என இந்தியாவின் மகேஷ் பூபதி, ரோகன் போபண்ணா தெரிவித்தனர். இதனால் அதிருப்தி அடைந்த அகில இந்திய டென்னிஸ் சங்கம் (ஏ.ஐ.டி.ஏ.,), பூபதி மற்றும் போபண்ணாவை டேவிஸ் கோப்பை தொடருக்கான அணியிலிருந்து அதிரடியாக நீக்கி, ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது. இதனால் நியூசிலாந்துக்கு எதிரான "ஆசிய-ஓசியானா குரூப்-1' "பிளே-ஆப்' சுற்றுக்கான இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று சண்டிகரில் ஏ.ஐ.டி.ஏ., கூட்டம் நடந்தது. இதில் பூபதி, போபண்ணாவின் தடை காலத்தை இரண்டு ஆண்டுகளாக உயர்த்தியது. இதன்படி இவர்கள் இவரும் டேவிஸ் கோப்பை மற்றும் தேசிய அளவிளான போட்டிகளில் வரும் 2014 ஜூன் மாதம் வரை பங்கேற்க முடியாது.